Don't Miss!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- News
மக்களே நோட் பண்ணிக்கோங்க.. சில சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம்..சென்னை மாநகராட்சி சூப்பர் பிளான்
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாவ்.. ஸ்டன்னிங்.. எங்கிருந்தது இந்த அழகு.. பிக்பாஸ் ஜூலியின் போட்டோவால் அசந்துப்போன நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ஜூலியின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இத்தனை நாட்களாய் இந்த அழகு எங்கிருந்தது என கேட்டு வாயை பிளந்துள்ளனர்.
Recommended Video
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் மரிய ஜூலியான. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார் ஜூலி.
என்னை கட்டிப்பிடிக்கவே ஆள் இல்லை என்றுக்கூறி பிக்பாஸ் வீட்டில் நுழைந்த மறு நாளே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
லாக்டவுனில் பிரபல சினிமா இயக்குனர் திருமணம்.. காதலியை கரம் பிடித்தார்.. திரையுலகினர் வாழ்த்து!

நிகழ்ச்சி தொகுப்பாளர்
தொடர்ந்து குரூப் ஃபார்ம் செய்துக்கொண்டு நடிகை ஓவியாவை உண்டு இல்லை என செய்தார். ஏராளமான பொய்களையும் சொன்னதால் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார். பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிறகு டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.

போட்டோக்கள்
அதனை தொடர்ந்து ஜூலிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அம்மன் தாயி, டாக்டர் எஸ்.அனிதா, உத்தமி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜூலி அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
மாடர்ன் டிரெஸ், டிரெடிஷ்னல் உடைகள் என விதவிதமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். அவர் என்ன போட்டோ ஷேர் செய்தாலும் அதனை கேலியும் கிண்டலுமாய் கலாய்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் நெட்டிசன்கள்.

போலீஸில் சிக்கினார்
இந்நிலையில் நடிகை ஜூலி வட இந்திய தொழில் அதிபருடன் லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும், தனது காதலரான அவருடன் கடற்கரையில் தனிமையில் இருந்த போது போலீஸில் சிக்கியதாகவும் தகவல் ஒன்று தீயாய் பரவியது.

அசராத ஜூலி
இதனை பார்த்த ஜூலி, இப்படி பொய்யான செய்தியை பரப்ப வெட்கமே இல்லையா என கேட்டு டிவிட்டரில் விளாசினார். ஆனாலும் அசராத ஜூலி தொடர்ந்து தனது விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

அட்டகாச லுக்..
அதில் மேக்ஸி கவுனில் கடற்கரை ஓரத்தில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் அடையாளமே தெரியாத அளவுக்கு ஃபுல் மேக்கப்பில் அட்டகாசமாக உள்ளார் ஜூலி. இதனை பார்த்த நெட்டிசன்கள் அமேஸிங் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

தொப்பி, ஜொலிக்கும் டிரெஸ்
இதேபோல் டூவீலர் ஓட்டுவது போன்று கையில் ஹெல்மெட்டுடன் போஸ் கொடுத்துள்ளார் ஜூலி. இந்த போட்டோவும் வேற லெவலில் உள்ளது. மேலும் அட்டைப்படம் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ள ஜூலி, தலையில் தொப்பி, ஜொலிக்கும் டிரெஸ் என போஸ் கொடுத்துள்ளார்.

எங்கே இருந்தது இந்த அழகு?
ஜூலியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இத்தனை நாட்களாய் இந்த அழகு எங்கிருந்தது என கேட்டு வாயை பிளந்துள்ளனர். இன்னும் சிலர், ஸ்டன்னிங், அமேஸிங், பியூட்டிஃபுல் என பெருமூச்சு வீட்டுள்ளனர்.