மடிசார் கட்டிக்கொண்டு மாமி லுக்கில் பிக்பாஸ் ஜூலி.. பேஷ் பேஷ் நன்னாருக்கு என பாராட்டும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஜூலி, மாமி கெட்டப்பில் மடிசாரில் ஷேர் செய்திருக்கும் போட்டோக்கள் லைக்ஸை அள்ளி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஜூலி. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற முதல் நாளே சக போட்டியாளரான ஸ்ரீயிடம் என்னை கட்டிப்பிடிக்க யாருமே இல்லை என கூறி திடுக்கிட வைத்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக நடிகை ஓவியா விஷயத்தில் இல்லாத பொய்களை எல்லாம் கூறி சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டினார்.

நடிக்கும் வாய்ப்பு
அவர் சொன்ன பொய்களாலும், செய்த டிராமாக்களாலும், அவரை ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினோம் என குடும்பத்தினரே வருந்தும்படி நடந்து கொண்டார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கடற்கரையில் போட்டோ
அம்மன் தாயி, டாக்டர் எஸ்.அனிதா, உத்தமி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜூலி அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் ஜூலி கலக்கல் போட்டோ ஷுட் நடத்தினார்.

ஜூலியா இது..
அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம அழகு என புகழ்ந்தனர். தொடர்ந்து மாடர்ன் டிரெஸில் ஆளே அடையாளம் கண்டுப்பிடிக்க முடியாதப்படி வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் போட்டோக்களை ஷேர் செய்தார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் ஜூலியா இது என்று கேட்டனர்.

மாமி கெட்டப்
இந்நிலையில் நடிகை ஜூலி, மடிசார் கட்டிக்கொண்டு மாமி கெட்டப்பில் அசத்தல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பச்சை நிற பஃப் வச்ச ஜாக்கெட், சிவப்பு நிற மடிசார், கழுத்த நிறைய நகைகள், கை நிறைய வளையல்கள் என ஃபுல் மேக்கப்பில் வேற லெவலில் உள்ளார் ஜூலி.

நன்னாருக்கு..
இதில் தூணை பற்றியப்படியும், குடை பிடித்தப்படியும் விதவிதமான லுக்கில் வித்தியாசம் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பேஷ் பேஷ் நன்னாருக்கு என பாராட்டி தள்ளியுள்ளனர்.

மூக்குத்தி சூப்பர்
சில நெட்டிசன்கள் என்ன மாமி அயோத்யா போறேளா என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர் கையில் குடையுடன் இருக்கும் போட்டோ அத்தனை அழகாக உள்ளது என்றும் கூறியுள்ளனர். மூக்குத்தி சூப்பர் என்றும் வர்ணித்துள்ளனர். இதே போட்டோவை தனது இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்துள்ளார் ஜூலி.


Click it and Unblock the Notifications











