புது மனைவியுடன் படு நெருக்கமாய் இருக்கும் பிரபல நடிகர்.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடன் படு நெருக்கமாய் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

எளிமையாக திருமணம்
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஜூவாலா கட்டாவை பதிவு திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். ஹைத்ராபாத்தில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து
இருவரின் திருமண போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த புது மண தம்பதிகள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு இணையத்தை திக்குமுக்காடச் செய்து வருகின்றனர்.

கணவர் பிறந்த நாள்
அந்த வகையில் தற்போது ஜூவாலா கட்டா வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது கடந்த 17 ஆம் தேதி விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை கணவன் மனைவி இருவரும் ஆட்டம் பாட்டம் என கொண்டாடியுள்ளனர்.

மனைவியின் மார்பில் சாய்ந்து
அந்த போட்டோவை ஜூவாலா கட்டா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜூவாலா கட்டாவின் மார்பில் சாய்ந்தப்படி அரை மயக்கத்தில் உள்ளார் விஷ்ணு விஷால். இந்த போட்டோவை மிஸ்டர்ஸ் லேட் பர்த்டே போஸ்ட் என ஷேர் செய்துள்ளார் ஜூவாலா கட்டா.

கொண்டாடுறீங்க போல
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இருவருமே பார்க்க இந்த போட்டோவில் ரொம்ப ஹாட்டாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு இருவரும் வாழ்க்கையை கொண்டாடுகிறீர்கள் போல என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











