மறைந்த நடிகை ஜோதி லட்சுமியின் கணவர் காலமானார்

சென்னை : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 1980 களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் ஜோதி லட்சுமி. தமிழ் படங்களில் 1963 முதல் நடித்து வந்தார்.

actress Jyothi Lakshmi’s husband Sai Prasad who passed away

புகழ்பெற்ற கவர்ச்சி நடிகராக இருந்த ஜோதி லட்சுமிக்கு ஜோதி மீனா என்ற மகள் உள்ளார். இவரும் பல படங்களில் ஒரு சில பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். சில படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். உள்ளத்தை அள்ளித்தா, அழகான நாட்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஜோதி லட்சுமியின் கணவர் சாய் பிரசாத் சென்னையில் இன்று காலை உயிரிழந்தார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

சென்னை - மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சாய் பிரசாத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. சாய் பிரசாத் - ஜோதி லட்சுமி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஜோதி லட்சுமி 1996 ம் ஆண்டு உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக திரையுலகை சேர்ந்தவர்களும், அவர்களின் உறவினர்களும் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் மற்றொரு இழப்பாக ஜோதிலட்சுமியின் கணவரும் உயிரிழந்துள்ளார்.

More from Filmibeat

Read more about: chennai சென்னை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X