இந்தியில் வெப் தொடரில் கமிட்டான ஜோதிகா.. மும்பையிலேயே செட்டில் ஆயிடுவாங்களோ?

மும்பை : மிகப்பிரபலமான நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோதிகா, இரண்டு குழந்தைகள் பிறந்து அவர்கள் ஓரளவிற்கு வளரும்வரையில் நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தார்.

கடந்த 2015ம் ஆண்டிலிருந்து மீண்டும் தன்னுடைய நடிப்புப் பயணத்தை துவங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகா வாலி என்ற படத்தில் படத்தில் தன்னுடைய நடிப்புப் பயணத்தை துவங்கி, தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகர் சூர்யாவுடனும் சில படங்களில் இணைந்து நடித்த ஜோதிகாவிற்கு அவருடன் காதல் ஏற்பட்டு, அந்தக் காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணமானவுடன் நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த ஜோதிகா, தொடர்ந்து இரண்டு குழந்தைகள் பிறந்து அவர்கள் ஓரளவிற்கு வளர்ந்தவுடன், மீண்டும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

2015ம் ஆண்டில் ரீ-என்ட்ரி

2015ம் ஆண்டில் ரீ-என்ட்ரி

கடந்த 2015ம் ஆண்டில் வெளியான 36 வயதினிலே என்ற படத்தின்மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தொடர்ந்து, மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் பெரும்பாலும் நாயகியை முன்னிருத்திய படங்களாக அமைந்துள்ளன. தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் காதல் : தி கோர்க் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பாலிவுட் படத்தில் ஜோதிகா

பாலிவுட் படத்தில் ஜோதிகா

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கியுள்ள நிலையில், விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஸ்ரீ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் தாபா கார்டல் என்ற புதிய வெப் தொடரில் கமிட்டாகியுள்ளார் ஜோதிகா.

பாலிவுட் படத்தில் ஜோதிகா

பாலிவுட் படத்தில் ஜோதிகா

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கியுள்ள நிலையில், விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஸ்ரீ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் தாபா கார்டல் என்ற புதிய வெப் தொடரில் கமிட்டாகியுள்ளார் ஜோதிகா.

வெப் தொடரில் கமிட்டான ஜோதிகா

வெப் தொடரில் கமிட்டான ஜோதிகா

இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது. இந்தத் தொடரில் ஜோவுடன் ஷபானா ஆஸ்மி, சுஜ்ராஜ் ராவ் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில் சோனாலி போஸ் இயக்கவுள்ளார். 5 குடும்ப பெண்களை மையமாக கொண்டு இந்தத் தொடர் உருவாகவுள்ளது. விரைவில் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து இந்தி படம், வெப் தொடர் என பிசியாகியுள்ள ஜோதிகா மும்பையில் தன்னுடைய பூர்வீக வீட்டில் தங்கி சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

ஜோதிகாவுடன் சூர்யா

ஜோதிகாவுடன் சூர்யா

சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்துவரும் சூர்யாவும் தற்போது தன்னுடைய படப்பிடிப்பில் கிடைத்த கேப்பில் மும்பை சென்றுள்ளார். அவர் மும்பையில் காணப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X