மும்பையில் 70 கோடியில் வீடு.. சூர்யாவை விட ஜோதிகாவிற்கு தான் அதிக சொத்து!
சென்னை: வாடி ராசாத்தி என நடிகை ஜோதிகாவிற்கு ரசிகர்கள் இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகை ஜோதிகாவிற்கு இன்றோடு 46 வயதாகிறது. இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அட்டகாசமாக இருக்கிறார் ஜோதிகா. அடுத்தடுத்து படத்தில் பிஸியாக நடித்துவரும் ஜோதிகாவின் சொத்தும் மற்றும் சம்பள விவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நடிகை என பெயர் எடுத்த நடிகை ஜோதிகா. ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர், தமிழ், இந்தி, மலையாளம் , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள இவரின் தனித்துவமான நடிப்பும், துரு துருப்பான பார்வையும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள்.

நடிகை ஜோதிகா: திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று சூர்யாவின் அப்பா சிவக்குமார் போட்ட கட்டளையால் படத்தில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசு சிறந்த நடிகைக்கான விருது வழங்கி உள்ளது. இந்த படத்திற்கு பிறகு ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே என அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்த ஜோதிகா,மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கணிசமான வசூலை அள்ளியது.
பாலிவுட் படத்தில்: இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டிலான ஜோதிகா, அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்த ஷைத்தான் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படமான ஸ்ரீ படத்தில் நடித்தார்.அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை ஜோதிகா இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கை கூறி வருகின்றனர்.

சொத்து மதிப்பு: இந்த நேரத்தில் அவரின் சொத்து மற்றும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நடிகை ஜோதிகா ஒரு படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இது மட்டுமில்லாமல், சென்னையில் 20,000 சதுர அடியில் மாபெரும் வீடு உள்ளது இதுமட்டுமில்லாமல், மும்பையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய அபார்ட்மெண்ட் வைத்து இருக்கிறார்.அது மட்டுமில்லாமல் BMW மற்றும் ஆடி கார்களை வைத்து இருக்கிறார். தற்போது, ஜோதிகாவின் சொத்து மதிப்பு 333 கோடியாக உள்ளது.
கணவரைவிட அதிக சொத்து: இதுமட்டுமில்லாமல்,சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமாக தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனத்தின் மூலம் வருமானம் வருகிறது.இவை மட்டுமில்லாமல், ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்திருக்கிறார் ஜோதிகா. இதன்மூலமாகவே கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார்.அதுபோக, விளம்பரம் மற்றும் பெரிய ப்ராண்டுகளுக்கு ப்ராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார் ஜோதிகா இதன் மூலமாகவும் இவருக்கு வருமானம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் தனது கணவர் சூர்யாவை விட அதிக சொத்துக்களை வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











