twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள நடிகை ஜோதிகா-மலேசியா கல்வி அமைச்சர் பாராட்டு

    |

    Recommended Video

    Raatchasi movie press meet | Jothika mass speech

    சென்னை: ராட்சசி படம் சமூதாய மாற்றத்திற்கான படம் என்று மலேசியா கல்வி அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் பாராட்டியுள்ளார். ராட்சசி படத்தில் நடிகை ஜோதிகா மிக பிரமாதமாக நடித்திருப்பதோடு, ஆழமான அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களாகவே பார்த்து பார்த்து அவர் நடித்து வருவது, இந்த சமுதாயத்தின் மீது அவருக்குள்ள அக்கறையை காட்டுகிறது, என்றும் அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் தனது சமூக வலைதளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அரசியலை பற்றி விமர்சனம் செய்து பல படங்கள் தற்போது வெளியாகி வரும் நிலையில், சமுத்திரக்கனி நடித்து வெளிவந்த சாட்டை படத்தின் மறுபக்கம் தான் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம்.

    Actress Jyothika played good role in Raatchasi -Mayaysian Minister Maszlee Bin Malik

    அரசு பள்ளியில் நடக்கும் அவலங்கள் மற்றும் அப்பள்ளியின் தகுதியை மேன்மை படுத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    இப்படத்தினை மலேசியாவின் கல்வி அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் பார்த்து விட்டு சமூக வலைதளங்களில், இது ஒரு முக்கியமான படம், சமூக மாற்றத்திற்கு அடிக்கோடிட்டுள்ள படம் என்று தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இப்படத்தில் ஜோதிகாவின் எதார்த்தமான நடிப்பு பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    Actress Jyothika played good role in Raatchasi -Malaysian Minister Maszlee Bin Malik

    அதோடு, இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா மிக பிரமாதமாக நடித்திருப்பதோடு, ஆழமான அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களாகவே பார்த்து பார்த்து அவர் நடித்து வருவது, இந்த சமுதாயத்தின் மீது அவருக்குள்ள அக்கறையை காட்டுகிறது, என்று ஜோதிகாவை பாராட்டி சமூக வலைதளம் மூலம் கூறியிருக்கிறார்.

    குண்டு அனுஷ்கா... குமுறும் ரசிகர்கள் - ஒல்லி பெல்லிதான் வேண்டுமாம்குண்டு அனுஷ்கா... குமுறும் ரசிகர்கள் - ஒல்லி பெல்லிதான் வேண்டுமாம்

    கல்வி துறையில் ஏற்படவேண்டிய வளர்ச்சி குறித்து பல விஷயங்களை அந்தப் படத்தில் கூறியிருக்கிறார்கள். மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பற்றி தெளிவாக கூறியுள்ளார்கள். சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட ராட்சசி படத்தை பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே பார்க்க வேண்டிய மிக முக்கியமான படம் என்றார்.

    Actress Jyothika played good role in Raatchasi -Mayaysian Minister Maszlee Bin Malik

    அறிமுக இயக்குனர் கவுதம் ராஜ், கல்வி துறையில் இருக்கும் பிரச்சனைகள், மாணவர்கள் சந்திக்கும் அவலங்கள், முன்னேற்றத்திற்கான வழிமுறைகள், கல்வி வளர்ச்சியில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் என பல செய்திகளை சமூக அக்கறையோடு வெளிப்படுத்தி இருக்கிறார்.

    Actress Jyothika played good role in Raatchasi -Mayaysian Minister Maszlee Bin Malik

    ஜோதிகாவை இப்படத்தில் கம்பீரமான தோற்றத்தில் காட்டியுள்ளார். அவரின் நடிப்பிற்கு மக்களிடையே நிறைய பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. பெண் சமுத்திரக்கனி என்று அழைக்கப்படுகிறார். இப்படம் வசூலில் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் மிகுதியாக பெற்றுள்ளது.

    Actress Jyothika played good role in Raatchasi -Mayaysian Minister Maszlee Bin Malik

    படங்களை தேர்வு செய்வதிலும் அவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் பற்றியும் நன்கு அலசி ஆராய்ந்த பிறகே ஜோதிகா இப்போது படங்களை தேர்வு செய்கிறார். அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு முன்னுறிமை கொடுக்கிறார். அப்படி அவர் நடித்து வெளிவந்த பல படங்கள் அவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்துள்ளது.

    English summary
    Malaysian Minister Dr.Maszlee Bin Malik has praised actress Jyothika on social media, saying that actress Jyothika has played a very good role in Raatchasi movie and she has shown her concern for the society by looking at her films as a deeply stressful storyline.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X