பாகுபலி பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கும் ஜோதிகா.. எந்தப் படத்துல தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகை ஜோதிகா பிரபாஸுக்கு அக்காவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. பாலிவுட் நடிகையான ஜோதிகா அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.

முன்னணி நடிகர்களுடன்
அவரது நடிப்பில் வெளியான குஷி, பேரழகன், காக்க காக்க, சந்திரமுகி, மொழி உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அஜித், விஜய், சூர்யா, மாதவன், விக்ரம், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் ஜோதிகா.

டூயட்டுக்கு நோ
கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. அதன் பிறகு ஹீரோக்களுடன் டூயட் பாடுவதை தவித்து வரும் ஜோதிகா தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ட்ராங் கம் பேக்
திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் குடும்பம் என செட்டிலான நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இந்தப்படம் அவருக்கு ஒரு பெரும் பிரேக்கை கொடுத்தது.

கேஜிஎஃப் இயக்குநர் படம்
தொர்ந்து, நாச்சியார், காற்றின் மொழி, ராட்சஸி, பொன்மகள் வந்தால் என அடுத்தடுத்து தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜோதிகா, கேஜி எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸுக்கு அக்காவாக
அதாவது பிரசாந்த் நீல் தற்போது பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் பிரபாஸுக்கு அக்காவாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

கார்த்திக்கு அக்காவாக
இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே நடிகை ஜோதிகா நடிகர் கார்த்திக்கு அக்காவாக தம்பி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











