சர்ச்சையை பற்றி கவலைப்படாத ஜோதிகா.. இன்ஸ்டாவில் என்ன போட்டோ போட்டு இருக்காருனு தெரியுமா?

சென்னை: சோஷியல் மீடியாவில் தலைகாட்டாமல் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருந்த ஜோதிகா, குழந்தைகளின் படிப்பிற்காக மும்பைக்கு செல்வதாக கூறி அங்கேயே செட்டிலாகி விட்டார். ஜோதிகா அங்கு போனதும் அவர் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வலம் வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜோதிகா இன்ஸ்டாகிராமில் செம ஸ்டைலாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சூர்யா, ஜோதிகா, இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து ஒன்றாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஆனால், இவர்களின் காதலுக்கு சூர்யாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், சூர்யாவோ ஜோதிகாவைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதமாக இருந்தார். இதனால், சிவகுமார், திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க்கூடாது என்ற நிபந்தனையுடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

jyothika instagram photos

நடிகை ஜோதிகா: திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டிலான ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இதனால், அவரது குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஜோதிகா, நீண்ட காலத்திற்கு பிறகு பாலிவுட்டில் என்ட்ரியாகி மாதவனுடன் சேர்ந்து ஷைத்தான் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்தார். இந்த படங்கள் மட்டுமில்லாமல், பாலிவுட்டில் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.

இன்ஸ்டா போஸ்ட் : ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஜோதிகா, கருப்பு பிளேசர் போட்டுக்கொண்டு, அப்பட்டமாக முன்னழகு தெரியும் படி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து இருந்தார். இந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ், இத்தனை ஆண்டுகள் தமிழ்ப் பெண்ணாக சேலையில் வலம் வந்த ஜோதிகா இப்படி மாறிவிட்டாரா என்றும், இதற்குத்தான் மும்பைக்கு போனீங்களா என்றும் கொந்தளித்து கருத்துக்களை பகிர்ந்தனர். அதை பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் ஸ்டைலாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

காரணம் இதுதான்: அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த நடிகை ஜோதிகா, தன் தாய் தந்தைக்கு வயதாகிவிட்டதாகவும் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக தான் மும்பையில் இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் தனக்கு தகுந்த கதாபாத்திரங்கள் வந்தால் மட்டுமே நடிப்பதாகவும் படம் வருகிறது என்பதற்காக இப்போது எல்லாம் டூயட் பாடிக்கொண்டு நடிக்க முடியாது என்றும் அதில் தான் தெளிவான முடிவில் இருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறுகின்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X