கேரள நீதிமன்றத்தில் நடிகை ஜோதிர்மயி விவாகரத்து மனு!

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஜோதிர்மயி. மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் தமிழில் 'தலைநகரம்' என்ற படத்தில் சுந்தர் சி.க்கு ஜோடியாக அறிமுகமானார்.
தொடர்ந்து, நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்பட சில தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.
ஜோதிர்மயிக்கும், கேரளாவை சேர்ந்த நிஷாந்த் என்ற சாப்ட்வேர் எஞ்ஜினீயருக்கும் கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் ஜோதிர்மயி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நிஷாந்த் வளைகுடாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஜோதிர்மயிக்கும், அவருடைய கணவர் நிஷாந்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ஜோதிர்மயி, கணவரை விட்டுப் பிரிந்தார். ஜோதிர்மயி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது பிடிக்காமல் அவர் கணவர் தொடர்ந்து சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு பேரும் மனமொத்து விவாகரத்து செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததால், ஜோதிர்மயி விவாகரத்து கேட்டு, கேரள குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.


Click it and Unblock the Notifications











