ஜோதிகா கையில் காமசூத்ரா புக்?.. ராஷ்மிகாவை தொடர்ந்து எல்லை மீறும் டீப் ஃபேக்.. என்ன கொடுமை சரவணா!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவைப் போலவே நடிகை ஜோதிகாவின் DeepFake போட்டோ ஒன்று இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் குறித்தும் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே DeepFake மூலம் ஆபாச சித்தரிப்புகள் அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது.

இந்த டீப் ஃபேக் வீடியோவிற்கு முதலில் பலியானது இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா தான். கருப்பு உடையில் லிஃப்டில் இருந்து வெளியே வருவது போன்ற 7 வினாடி கொண்ட டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. அந்த வீடியோவில் கருப்பு நிற ஜம்ப்சூட் உடை அணிந்து அவர் லிஃப்டின் வெளியே இருந்து உள்ளே வருவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

jyotika photo

DeepFake போட்டோ: ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட தனது DeepFake Edit வீடியோ இணையதளத்தில் பரவியதை பார்த்த நடிகை ராஷ்மிகா வருத்தம் தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக சினிமா நடிகர்கள் கருத்து கூறி, இந்த டீப் ஃபேக் வீடியோவை வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இதையடுத்து, மத்திய அரசு, இதுபோன்ற அவதூறு செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தது.

jyotika photo

ஜோதிகாவின் ஃபேக் போட்டோ: இந்நிலையில் தற்போது நடிகை ஜோதிகாவின் டீப் ஃபேக் போட்டோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த போட்டோவில் ஜோதிகா, கவர்ச்சி உடையில் இருக்க அவரது கையில் காமசூத்ரா புத்தகம் உள்ளது. மேலும் ஜோதிகாவின் அருகில் ஒரு ஆண் சட்டை இல்லாமல் நிற்போது போல, மொத்தமும் போலியாக எடிட் செய்து சில விஷமிகள் வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோவை பார்த்தால், நமக்கே பதற்றம் ஏற்படும் அளவிற்கு ஒரிஜினல் போல உள்ளது.

jyotika photo

பாதிக்கும் சூழல்: உண்மையில் ஜோதிகா Eat your Cake loss your weight என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளரான அஜார் அலி சையத் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான், விஷமிகள் எடிட் செய்து, ஜோதிகா ஆபாச உடையில் காமசூத்ரா புத்தகத்தை வைத்து இருப்பது போல போலியாக வெளியிட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. AI தொழில்நுட்பத்தின் மூலம், ஆபாச சித்தரிப்புகள் அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது. இதனால் நடிகைகள் உள்பட சாதாரண பெண்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X