Actress Jyotika: மகிழ்ச்சி மட்டுமில்ல வியர்வையும் டபுள்தானாம்... ஜோதிகா பகிர்ந்த வொர்க்அவுட் வீடியோ!
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் பெயரிலேயே 2D என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு என அடுத்தடுத்த விஷயங்களில் பிசியான ஜோதிகா சிறிது காலங்கள் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து அவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
தற்போது இருவரும் ஆதர்ச தம்பதிகளாக அடுத்தடுத்து பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இணைந்து பங்கேற்று வருகின்றனர். சூர்யாவின் பட விழாக்களில் ஜோதிகாவும் ஜோதிகா நடிக்கும் படங்களின் விழாக்களில் சூர்யாவும் பங்கேற்று தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களது அன்பு ஒர்க்-அவுட் செய்வதிலும் சிறப்பாக காணப்படுகிறது. இருவரும் இணைந்து பல நேரங்களில் ஒர்க்அவுட் செய்வதை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தங்களுக்கும் இதுபோல ஒர்க்அவுட் செய்ய உத்வேகம் ஏற்பட்டுள்ளதாக கமெண்ட் செய்து லைக்ஸ்களையும் தட்டி வருகின்றனர்.

சூர்யா -ஜோதிகா ஜோடி: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நீண்ட வருடங்கள் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்தவர்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் நடிப்பில் படங்கள் ரிலீசாகாத நிலையில் அடுத்ததாக கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.
சைத்தான் படம்: இதனிடையே மாதவன் மற்றும் அஜய் தேவ்கனுடன் இணைந்து ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் சில தினங்களிலேயே 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனால் பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் ஜோதிகா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்களது பிஸியான ஷெட்யூலிலும் தயாரிப்பையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது தயாரிப்பில் அடுத்ததாக இந்தியில் சூரரை போற்று படத்தின் ரீமேக் வெளியாக உள்ளது.
சூர்யா -ஜோதிகா வொர்க்அவுட்: இந்நிலையில் இவர்களின் ஜோடி கோலிவுட்டில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் மிகவும் பிரபலமானதாக காணப்படுகிறது. சமீபத்தில் சைத்தான் படத்தின் பிரிமியர் ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சிகளின் ஹைலைட்டாக இவர்கள் இருவருமே காணப்பட்டனர். இந்நிலையில் இருவரும் தங்களது பிட்னஸில் மிகவும் அக்கறை காட்டி வருவதையும் அடுத்தடுத்த இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் தற்போது ஜோதிகா வெளியிட்டுள்ள பிட்னஸ் வீடியோவில் ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து அடுத்தடுத்த வொர்க் அவுட்களில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.
குவியும் லைக்ஸ்: இதை பார்த்த ரசிகர்கள் உத்வேகம் அடைந்து லைக்ஸ்களை தட்டி விட்டு வருகின்றன. சூர்யா கங்குவா படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இம்மாதத்திலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவரது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்தப் படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் மற்றும் காதலை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











