'இஃப் யு ஆர் பேட் ஐயம் யுவர் டாட்... தனுஷ் பேசியது என் வசனம்'... காப்புரிமை கேட்கும் நடிகை காஜல்!

மாரி 2 படத்தில் தனுஷ் பேசும் வசனத்திற்கு நடிகை காஜல் காப்புரிமை கேட்டுள்ளார்.

சென்னை: மாரி 2 படத்தில் தனுஷ் பேசும் வசனம் தன்னுடையது என நடிகை காஜல் பசுபதி உரிமை கோரியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய மாரி 2 திரைப்படம் 21ம் தேதி வெளியானது. சேட்டைக்கார டானாக தனுஷ் நடித்துள்ள இப்படம் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Actress Kaajal asks copyright from actor Dhanush

இந்த படத்தில் தனுஷ் பேசும் பஞ்ச் டயலாக்குகள் பிரபலமடைந்துள்ளன. குறிப்பாக படத்தில் தனுஷ் பேசும், 'இஃப் யு ஆர் பேட்... ஐயம் யுவர் டாட்", அதாவது "நீ கெட்டவன்னா நான் உங்கப்பன்டா" எனும் வசனம் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

இந்த வசனத்தை படத்தில் அடிதாங்கியாக நடித்த வினோத் தான் சொன்னதாக நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டு பேசினார். மேடையிலேயே வினோத்தை பாராட்டவும் செய்தார்.

இந்நிலையில் இந்த வசனம் தன்னுடையது என்றும், இதற்காக தனுஷிடன் காப்பிரைட் கேட்க இருப்பதாகவும் நடிகை காஜல் பசுபதி தெரிவித்துள்ளார். மேலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் விளையாட்டாகவே இதனை தெரிவித்துள்ளார் என்பது தெளிவாகிறது.

இதேபோல், மாரி 2 படத்துடன் வெளியான கன்னட டப்பிங் படமான கேஜிஎப்பிலும் இதே வசனம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X