Seeman: பாவம்யா அந்த நடிகை.. பெமினிஸ்ட் கேங் எங்கே போனீங்க.. சீமானை விளாசிய காஜல் பசுபதி!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை புகார் அளித்திருந்தார். பின் அவரே இந்த வழக்கைத் திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகததால், அவருடைய வீட்டில் சம்மன் ஒட்டப்பட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதைத் தொடர்ந்து, சீமான் விசாரணைக்கு ஆஜர் ஆனார். தற்போது, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு மார்ச் 7 தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Seeman Kaajal pasupathi

பாலியல் குற்றவாளியா?: இப்படி சீமான் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், என்னை பாலியல் குற்றவாளி என்கிறார்கள், நீங்கள் என்ன நீதிபதியா? விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறலாம். அந்த நடிகை தான் பாலியல் தொழிலாளி அதற்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது. இத்தனை வருடமாக என்னையும், குடும்பத்தையும் அவமானப்படுத்தினால், அவளுக்கு மட்டும் தான் வலிக்குமா, எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் பெண்கள் இல்லையா என பேசி இருந்தார்.

பாலியல் தொழிலாளியா: சீமானின் இந்த பேச்சை கேட்ட அந்த நடிகை, கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், நான் பாலியல் தொழிலாளியா? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லியிருக்கீங்க,.நான் பாலியல் தொழிலாளியாக இருந்து இருந்தால், எதற்கு பெங்களூரில் இப்படி கஷ்டப்படுகிறேன். இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம் ஆனால் இனிமேல் நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீரே உன்னை சும்மா விடாது என்று பேசி இருந்தார். இந்நிலையில்,நடிகை காஜல் பசுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் அந்த நடிகை கதறி அழும் வீடியோவை பதிவிட்டு, ஒரு பெண்ணை ஒருவன் இஷ்டத்திற்கு பேசிக்கிட்டு இருக்கான்... இந்த ஃபெமினிஸ்ட் கேங் எங்கே போனீங்க என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X