4 வருஷ நரகமான வாழ்க்கை.. தப்பான ரிலேஷன்ஷிப்.. செத்து பொழச்சேன்.. நடிகை வேதனை!

சென்னை: தமிழ் சினிமவில் நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் பசுபதி. சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய இவர், 2011ஆம் ஆண்டு கே.வி ஆனந்தின் இயக்கத்தில் வெளியான 'கோ' படத்தில் வில்லன் கூட்டத்தில் ஒருவராக நடித்து பிரபலமானார். இந்த படத்தில் மட்டுமன்றி, மௌன குரு, கதம் கதம் என்ற படங்களிலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் சீசனில் முதல் சீசனில் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தார், நடிகை காஜல் பசுபதி. அந்த வீட்டில் 70 நாட்கள் வரை இருந்தார். இவர் சாண்டி மாஸ்டர் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2012ஆம் ஆண்டு பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேட்டியில் கூறியுள்ளார்.

kaajal pasupathi sandy master interview

நடிகை காஜல் பசுபதி:அதில், நான் ரொம்பவும் பொசஸிவாக இருப்பேன், இதுதான் பலர் பிரிந்து போவதற்கு காரணமா இருந்தது. நான் சாண்டியை பிரிந்து விவாகரத்திற்கு பிறகு நான் ஒருவரை காதலித்தேன். அவர் மீது எந்த பொசஸிவ்னஸும் இருக்க கூடாது என்று நினைத்து நான் அவரிடம் உனக்கு முழு ஃப்ரீடம் கொடுக்கிறேன். அதுபோல நானும் முழு ஃப்ரீடமாக இருப்பேன் என்று சொல்லிவிட்டேன். ஆரம்பத்தில் எங்கள் உறவு நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது. முதலிலேயே எல்லாத்தையும் சொல்லிவிட்டதால், அவரும் அதற்கு ஏற்றால் போல என்னிடம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டார்.

விடிய விடிய சண்டை: என் பிறந்த நாள் அன்று, என் நண்பர்களை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து இருந்தேன், அவரும் அவர் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து இருந்தார். அப்போது, அவரின் நண்பர் ஒருவன், அவனை வேறு ஒரு பெண்ணுடன் வெளியில் பார்த்ததை சொல்லிவிட்டான். இது எனக்கு தெரிந்துவிட்டதால், அவன் என்ன செய்வது என்று தெரியாமல், அதை மறைக்க, ஏதோ ஒரு காரணத்தை சொல்லி என்னிடம் சண்டை போட்டு, பிறந்த நாளுக்கு வந்த என் நண்பர்களையும் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டான். இதனால், இருவருக்கும் சண்டை வந்து, இத்தனை நாள், அடக்கி வைத்த மொத்த கோவத்தையும் அன்னைக்கு என் மீது காட்டி விட்டான்.

செத்து இருப்பேன்: விடிய விடிய அடி,என்னால அவனை திரும்பி அடிக்க முடியும் ஆனால், நான் திருப்பி அடிக்கவில்லை, என் மைண்டில் அவன் என்னைவிட பலசாலி என நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்து விட்டேன். ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து குத்த வந்துவிட்டான். அவ்வளவு தான் செத்தோம்டா என்று நினைத்தேன். ஆனால் குத்தவில்லை. அதன்பிறகு என் வீட்டுக்கு ஃபோன் செய்தேன். அவர்கள் என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

காதலிக்கிறவர்களிடம் ரொம்பவும் பொசஸிவாக ஆக இருந்தாலும் தப்பு என்று சொல்றாங்க இல்லனாலும் தப்பு என்று சொல்லுறாங்க நான் என்னதான் பண்ணுவது? என்று தெரியவில்லை. காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம் என்று காஜல் அகர்வால் அந்த பேட்டியில் பேசி உள்ளார். பல கவலைகள் மனதில் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சோகத்தைக்கூட எதார்த்தமாக சிரித்துக்கொண்டே பேசி இருந்தார் காஜல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X