திடீர் என்று பண்ணினதால் தான் சொல்ல முடில.. பிரபல நடிகரின் முன்னாள் மனைவி மறுமணம்!

சென்னை: பிரபல நடிகை காஜல் பசுபதி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி சன் மியூசிக் சேனலில் விஜேவாக மீடியாவிற்குள் நுழைந்தார். இதையடுத்து, நடிகை காஜல், வசூல்ராஜா எம்பிபிஎஸ், இதயதிருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், மெளனகுரு, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Actress kaajal pasupathi getting second marriage photos trending on social media

காஜல் பசுபதி படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சாண்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். ஆனால், சாண்டியை பிரிந்த காஜல் இன்னும் திருமணம் செய்யாமல் தனியாகவே இருக்கிறார். அவ்வப்போது சாண்டியின் குழந்தைகளை வீட்டுக்கு சென்று பார்த்து அவர்களுடன் இருந்து வருகிறார்.

நடிகை காஜல் பசுபதி: இவருக்கு படங்களில் பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் பசுபதி, அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஹாட்டான விஷயங்களுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறார். மகாலட்சுமி மற்றும் ரவீந்திரன் திருமணத்தின் போது, இது எல்லாம் பணத்திற்காக நடந்த திருமணம் என்று நெட்டிசன்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு சரியான பதில் அடி கொடுத்து நெட்டிசன்களில் வாயை அடைத்தார்.

மிட் நைட்டில் கால்: அதேபோல, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், நான் யாரிடமும் வாய்ப்பு கேட்டது இல்லை, ஒரு முறை என் நெருங்கிய தோழியுடைய காதலனின் நண்பனிடம் ஏதாவது சீரியலில் நடிக்க வாய்ப்பு இருக்குமா என்று கேட்டேன். அப்போது எந்த பதிலும் சொல்லாத அந்த நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மிட்நைட்டில் போன் செய்கிறார். எனக்கு அந்த மாதிரி பொண்ணு வேணும், இந்த மாதிரி பொண்ணு வேணும் என்றார். நண்பனே நம்மிடம் தவறாக பேசும் போது, மற்றவர்களிடம் எப்படி வாய்ப்பு கேட்க முடியும். இதனால், யாரிடமும் எந்த வாய்ப்பையும் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன் என்று பேசி இருந்தார்.

திடீர் திருமணம்:ஆனால்,இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து அலப்பறை செய்து வரும் காஜல் பசுபதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும், அதில், ஒருவழியாக எனக்கு இரண்டாவது திருமணம் முடிந்து விட்டது. திடீர் என நடந்ததால் சொல்லமுடியவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால், அந்த போட்டோவில் மாப்பிள்ளையின் முகம் தெரியாதபடி மறைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் உண்மையில் இரண்டாம் திருமணம் நடந்து விட்டதா என்றும், இந்த போட்டோவைப் பார்த்தால் பழைய போட்டோ போல் தெரிகிறது என்றும் கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: dance master sandy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X