சம்பந்தம் இல்லாமலா தப்பா பேசுவாப்ல.. மீரா மிதுனை வச்சு செய்த சாண்டியின் முன்னாள் மனைவி!

சென்னை: நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு செல்ல ஆசைப்படும் நடிகை மீரா மிதுனை சாண்டியின் முன்னாள் மனைவியும் நடிகையுமான காஜல் வச்சு செய்துள்ளார்.

Recommended Video

Shalu Shammu வை மிரட்டும் Meera Mithun | Filmibeat Tamil

நடிகை காஜல் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். டிவி சீரியல்களில் நடித்துள்ள காஜல் வசூல் ராஜா எம்பிபிஎஸ், கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி ஆவார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

சாண்டிக்கு ஆதரவு

சாண்டிக்கு ஆதரவு

டிவிட்டரில் ஆக்டிவாக உள்ள காஜல் கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற தனது முன்னாள் கணவர் சாண்டிக்கு ஆதரவாக டிவிட்டி வந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய பிரச்சனைகள் குறித்தும் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தார்.

நியூட்ரலாக இருந்தார்

நியூட்ரலாக இருந்தார்

குறிப்பாக மதுமிதாவை வனிதா டார்கெட் செய்து பேசிய போது அவரை கடுமையாக விமர்சித்தார் காஜல். வனிதாவை எதிர்த்து பேசியதற்காக தர்ஷனை பாராட்டினார். பல சம்பவங்களில் நியூட்ரலாக இருந்தார் நடிகை காஜல்.

மீரா மிதுன் குறித்து..

மீரா மிதுன் குறித்து..

எந்த விஷயம் என்றாலும் சமூக வலைதளம் மூலம் கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மீரா மிதுன் குறித்து பேசியுள்ளார். அதாவது சர்ச்சைகளுக்கு பெயர் போன மீரா மிதுன், நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

சம்பந்தம் இல்லாமலா..

சம்பந்தம் இல்லாமலா..

அதுகுறித்துதான் பேசியிருக்கிறார் நடிகை காஜல். மீரா மிதுன் கைலாசா நாட்டுக்கு செல்ல விருப்பம் என்று வெளியான செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் சம்பந்தம் இல்லாமலா நமக்கு பிடித்தவர்கள் குறித்து பேசுவார் என்றும் கேட்டுள்ளார்.

தப்பா பேசுவாப்ல

தப்பா பேசுவாப்ல

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கைலாசாவுக்கு செல்ல விரும்பும் ரோல் மாடல்ன்னு நினைச்சேன்.. எனக்கு தெரியும் எனக்கு தெரியும் எனக்கு தெரியும்.. சம்பந்தமே இல்லாமலா அந்த பாப்பா சூர்யா, ஜோ, விஜய் அவர் வொய்ஃப்ன்னு நமக்கு பிடிச்சவங்கள மட்டும் டார்கெட் பண்ணி தப்பா பேசுவாப்ல.. போய் வா மகளே.. போய் வா.. மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

என்ன மகிழ்ச்சி?

என்ன மகிழ்ச்சி?

காஜலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவர் கைலாசா நாட்டுக்கு சரியான ஆள் தான் என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் அப்படியாவது அவர் தமிழகத்தை விட்டு போகட்டும் என்றும் அவர் கூறியுள்ளனர். இன்னும் சிலர் மீரா மிதுன் கைலாசாவுக்கு செல்வதில் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X