சூர்யா பிறந்தநாளுக்கு வித்தியாசமா வாழ்த்து சொன்ன காஜல்.. இது அவருக்கு தெரியாதாம்!

சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை காஜல் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுல் ஒருவர் ஆவார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சூர்யா. ஆனால் முதல் நான்கு ஆண்டுகள் வெளியான படம் எதுவும் சூர்யாவுக்கு பெயர் சொல்லும் வகையில் இல்லை.

ஏறுமும்தான்

ஏறுமும்தான்

ஆனால் 2001ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படம் சூர்யாவின் நடிப்புக்கு வேறு ஒரு பரிணாமத்தை கொடுத்தது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஏறுமுகம் தான்.

தெலுங்கு ரசிகர்கள்

தெலுங்கு ரசிகர்கள்

காக்க காக்க, பிதாமகன், கஜினி, வாரணம் ஆயிரம், சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கிய இடமுண்டு. சூர்யாவுக்கு தமிழில் மட்டுமின்றி ஆந்திராவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஜோதிகாவுடன் திருமணம்

ஜோதிகாவுடன் திருமணம்

கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சூர்யா. சூர்யா நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யாவுக்கு தெரியாது

சூர்யாவுக்கு தெரியாது

அந்த வகையில் நடிகையும் டிவி தொகுப்பாளருமான காஜல் பசுபதி நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது சூர்யா சாருக்கு தெரியாது என்று கூறி ஒரு போட்டோவையும் போட்டுள்ளார் காஜல்.

ஒரிஜினலைவிட நல்லாருக்கு

வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டியை சூர்யா பின்னாடி இருந்து ரசிக்கும் போட்டோவை போட்டோஷாப் செய்து தனது போட்டோவை பதிவேற்றியுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினலைவிட இது நல்லாருக்கு என கருத்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X