Hema Committee: மார்பகங்களைப் பார்த்ததும் உணர்ச்சி வந்துடுமா? காமக்கொடூரர்களை நோக்கி நடிகை கேள்வி!
சென்னை: காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை சரண்யா. இவர் நமது ஃபிலிமி பீட் தமிழ் யூடூயூப் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அவரிடம் சினிமா என்பது பெண்களுக்கு பாதுகாப்பான இடமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு நடிகை சரண்யா மிகவும் காட்டமான பதிலைக் கொடுத்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான். முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக மாறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன் லால் அவராகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையிதான் நடிகை சரண்யா நமது யூடூயூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்தார். ஹேமா கமிட்டி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சரண்யாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன பதில்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, " என்னைப் பொறுத்தவரை சினிமா மிகவும் பாதுகாப்பான இடம்தான். ஆனால் பெண்களுக்கு எந்த இடத்தில்தான் பாதுகாப்பு இருக்கின்றது? எல்லா இடங்களிலும் ப்ளஸ், மைனஸ் இருக்கின்றது. சினிமா என்பது பொதுமக்கள் கவனிக்கும் இடமாக இருப்பதால், அனைவரும் மிகச் சாதாரணமாக விமர்சனம் செய்துவிடுகின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு: சினிமா மட்டும் இல்லை, எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அட்ஜெஸ்மெண்ட் என்ற சிக்கலை நானுமே எதிர்கொண்டுள்ளேன். இது தெரிந்துதான் உள்ளே வரவேண்டியுள்ளது. பார்ப்பவர்கள் , இந்தப் பிரச்னை இருக்கின்றது என்பது தெரிந்துமே ஏன் சினிமாவில் நடிக்க வருகின்றீர்கள் என கேட்கலாம். அப்படியானால், பெண்கள் எந்த தொழிலுக்கு போவது என நீங்களே சொல்லுங்கள். படி தாண்டாமல் இருந்தால்தான் நீங்கள் சொல்லும்படி இருக்க முடியும். ஆனால் பெண்கள் எப்போது வெளிச்சத்தைப் பார்ப்பது?

அட்ஜெஸ்மெண்ட் : ஆனால் எந்த பிரச்னை, இடையூறு வந்தாலும் நாங்கள் எதிர்த்துவிட்டு முன்னேறி வருகின்றோம். இப்போது இருக்கும் அறிவும் தைரியமும் அப்போது எனக்கு இல்லை. ஒருவன் என்னைத் தொடுகின்றான் என்றால் என்னால் அப்போது எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. இப்படியெல்லாம் இருந்தால்தான் சினிமாவில் இருக்க முடியும்போல என்று நான் நினைத்த காலம் எல்லாம் உண்டு. அட்ஜெஸ்மெண்ட் என்பது சினிமாவில் மிகவும் சாதாரணம் போல என நினைத்தேன். இப்போது சினிமாவிற்குள் வரும் பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியத்துடன் வாருங்கள்.

ஆண்கள்: எல்லா ஆண்களையும் நான் குறிப்பிடவில்லை. ஆனால் ஒருவர் பழகும்போது அவரின் நோக்கம் என்ன என தெரிந்துவிடும். வாய்ப்புக்காக அட்ஜெஸ்மெண்ட் என்ற நிலைக்கு போகக்கூடாது. பெண்கள் எப்போதும் தங்களது உடையை சரி செய்து கொண்டே இருக்க முடியாது. எங்களுக்கும் வேலை இருக்கின்றது. அதேநேரத்தில் இப்போது என்னைச் சுற்றியுள்ள ஆண்கள் என்னை கண்ணியமாக நடத்துகின்றனர். ஆனால் ஒரு சில ஆண்களுக்கு பெண்களின் மார்பகங்களைப் பார்த்தாலே உணர்ச்சி வந்துடும்போல.
தாய்: அப்படியானால் அவரின் தாயைப் பார்க்கும்போதும் உணர்ச்சி வரவேண்டும். அப்படி செய்பவர்கள் சொல்வது, நான் மார்பகங்களைப் பார்த்ததும் எனக்கு உணர்ச்சி வந்து விட்டது. அதனால் அப்படி செய்து விட்டேன் எனக் கூறுகின்றார்கள். இப்படிக் கூறும் நபரின் தாய்க்கும் மற்ற பெண்களுக்கும் உடல் ஒரே மாதிரிதானே உள்ளது. முகம் மட்டும்தானே வேறு, ஆனால் இப்படியான சிந்தனை உள்ள ஆண்கள் நான் சொல்லும் கான்செப்ட்க்கே வரமாட்டார்கள்.


Click it and Unblock the Notifications











