கோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்பு… பிஸியான காஜல் அகர்வால்!
சென்னை : நடிகை காஜல் அகர்வால் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு படு பிஸியாக நடித்து வருகிறார்.
அஜித், தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயரும் எடுத்துள்ளார்.
தமிழில் மட்டுமல்லாது, இந்தி மற்றும் தெலுங்கிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

விரைவில் படப்பிடிப்பு
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய ரோலில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் விபத்து, லைகா நிறுவனத்துடன் கருத்து மோதல், கொரோனா போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தொடராமல் உள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லீட் ரோலில்
ஹே சினாமிகா என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார் நடன இயக்குனர் பிருந்தா. துல்கர் சல்மான், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திலும், காஜல் அகர்வால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியுடன்
சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, கோஷ்டி மற்றும் கங்கனா ரணாவத்திற்கு தேசிய விருதை பெற்றுத்தந்த குயின் திரைப்படத்தின் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் உமா என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
Recommended Video

படு பிஸியாக
இதையடுத்து புதிதாக ரவுடி பேபி என்ற திரைப்படத்திலும் கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தை புது இயக்குனர் ராஜா சரவணன் இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் சுமார் 10 திரைப்படங்களில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகள் சிறிதும் குறையாமல் படு பஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











