“இந்தியன் 2“ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது..ரெடியாகிறார் காஜல் அகர்வால்!
சென்னை : இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ள நிலையில், நடிகை காஜல் அகர்வால் அந்த படத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
Recommended Video
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

இந்தியன் 2
அதைத்தொடர்ந்து கொரோனா பரவல், படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து 'RC15' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே. கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு இன்று முதல் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி உள்ளது.

படப்பிடிப்பு ஆரம்பம்
உதயநிதி ஸ்டாலினும் இந்தியன் 2 திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார். இன்று முதல், சென்னை எழிலகத்தில் ஷூட்டிங் நடைபெற உள்ளது. இதில் பாபி சிம்ஹா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் உள்ளதால் அவர் அடுத்த மாதம் தான் இந்தியன் 2 ஷூட்டிங்கில் இணைய உள்ளார். செப்டம்பர் 5-ந் தேதி முதல் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

விவேக் காட்சி நீக்கம்
இப்படத்தில் நடிகர் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவர் கடந்த ஆண்டு திடீரென மரணமடைந்து விட்டதால், தற்போது அவருக்கு பதில் பிரபல மலையாள நடிகர் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க ஒப்பந்தமாகி உள்ளார். விவேக் மரணமடைந்துவிட்டதால் அவர் நடித்த காட்சிகள் முழுவதுமாக நீக்கப்பட உள்ளது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வாலுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் பரவிய நிலையில், படக்குழு வெளியிட்ட இந்தியன் 2 புதிய போஸ்டரை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அந்த படத்தில் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். நடிகை காஜல் செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











