ஆசை கணவருடன் கலர்புல் ஹோலி..காஜல் அகர்வால் வெளியிட்ட பிக்ஸ் !
சென்னை : நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் முதல் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் ஹிந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமாக உள்ளார்.
விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விதவிதமன புகைப்படம்
இவர்களது திருமணம் மிகக் கோலாகலமாக நடத்தப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து ஹனிமூனுக்கு மாலத்தீவு உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வாய்பிளக்கவைத்தனர்.

வெற்றி நாயகி
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெற்றி நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர், விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் மற்றும் அஜித்துடன் விவேகம், மேலும் முன்னணி நடிகர்களான சூர்யா, தனுஷ்,கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

கைவசம் பல படங்கள்
இவர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, ஆச்சார்யா, ஹேய் சனாமிகா போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரியலில் நடித்தார். ஹாரர் கதைகளத்தைக் கொண்டு வெளிவந்துள்ள இந்தவெப் தொடர் 7 எபிஸோடுகளை கொண்டுள்ளது.
கலர்புல் ஹோலி
இந்நிலையில் இப்பொழுது காஜல் அகர்வால் தனது காதல் கணவருடன் முதல் ஹோலி பண்டியை கொண்டாடி உள்ளார். அந்த கலர்புல்லான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த காஜல் அகர்வால் வண்ணமயமான இந்த ஹோலி,அன்பு, நேர்மையான எண்ணம், நல்ல ஆரோக்கியத்தை தரும் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











