சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு.. கர்ப்பமா? குவியும் வாழ்த்து.. மவுனம் காக்கும் காஜல் அகர்வால்!

சென்னை: நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

2004ஆம் ஆண்டு வெளியான க்யூன் ஹோ கயா நா.. என்ற பாலிவுட் படத்தின் முலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.

அதனை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் டோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

முன்னணி நடிகை காஜல்

முன்னணி நடிகை காஜல்

பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மளாட்டம் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படத்துக்கு முன்பாகவே பழனி படம் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல்.

கமலுடன் இந்தியன் 2 படம்

கமலுடன் இந்தியன் 2 படம்

தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது காதலரை கரம் பிடித்தார்.

கவுதம் கிட்சுலுவுடன் திருமணம்

கவுதம் கிட்சுலுவுடன் திருமணம்

தொழில்திபரான கவுதம் கிட்சுலுவை காஜல் அகர்வால் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற காஜல், அங்கு கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை வெளியிட்டு மிரள வைத்தார்.

கிளாமர் போட்டோ ஷூட்

கிளாமர் போட்டோ ஷூட்

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். திருமணத்திற்கு பிறகு கிளாமரில் அதிக கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் தொடர்ந்து கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வந்தார்.

தமிழில் காத்திருக்கும் 5 படங்கள்

தமிழில் காத்திருக்கும் 5 படங்கள்

கடைசியாக அவரது நடிப்பில் மொசகல்லு என்ற தெலுங்கு படம் ரிலீஸ் ஆனது. தமிழில் ஹே சினாமிக்கா, கருங்காப்பியம், கோஸ்ட்டி, பாரிஸ் பாரிஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்தியில் உமா என்ற படத்தில் நடித்துள்ளார் காஜல் அகர்வால் இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

காஜல் அகர்வால் கர்ப்பம்

காஜல் அகர்வால் கர்ப்பம்

மேலும் ஆச்சார்யா மற்றும் தி கோஸ்ட் என்ற இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

ஆனால் பின்னர் அது வெறும் வதந்தி என தெரியவந்தது. இந்நிலையில் 36 வயதான நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும் காஜல் அகர்வால் தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மறுப்பு தெரிவிக்கவில்லை

மறுப்பு தெரிவிக்கவில்லை

காஜல் அகர்வால் - கவுதம் கிட்சுலு தம்பதி அடுத்த மாதம் தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் அவர்களின் முதல் குழந்தை குறித்த தகவல் வெளியாகும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த தகவல் குறித்து காஜல் தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை, அதேபோல் எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X