டீகே இயக்கும் ஹாரர் படம்... மீண்டும் டீகே இயக்கத்தில் இணையும் காஜல் அகர்வால்

சென்னை : யாமிருக்க பயமே படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கான ரசிகர்களை தக்க வைத்தவர் இயக்குநர் டீகே.

தொடர்ந்து கவலை வேண்டாம் என்ற படத்தை இயக்கினார் டீகே. காஜல் அகர்வால் இந்த படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த முறை ஹாரர் படத்தை இயக்கவுள்ளார் டீகே.

வெப் சீரிசில் நடித்த காஜல்

வெப் சீரிசில் நடித்த காஜல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெப் சீரிஸ் லைவ் டெலிகாஸ்ட். ஹாரரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரிசில் நடித்திருந்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன.

கவலை வேண்டாம் கூட்டணி

கவலை வேண்டாம் கூட்டணி

யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களைய இயக்கிய டீகே இந்த ஹாரர் படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே காஜல் அகர்வால் -டீகே கூட்டணி கவலை வேண்டாம் படத்தில் இணைந்திருந்தது. ஆனால் நினைத்தபடி அந்த படம் வெற்றி பெறவில்லை.

ஓகே சொன்ன காஜல்

ஓகே சொன்ன காஜல்

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இந்த ஹாரர் படம் மூலம் இணையவுள்ளனர். சமீபத்தில் காஜல் அகர்வாலை சந்தித்து இந்த படம் குறித்து டீகே பேசியுள்ளார். கவலை வேண்டாம் படம் சரியாக போகவில்லை என்றாலும் இந்த படத்தின் கதை மிகவும் பிடித்துப் போனதால் உடனடியாக காஜல் அகர்வால் ஓகே சொல்லிவிட்டாராம்.

ரசிகர்களின் வரவேற்பு

ரசிகர்களின் வரவேற்பு

கடந்த 2014ல் டீகே இயக்கத்தில் வெளிவந்த யாமிருக்க பயமே படம் கிருஷ்ணா, ஓவியா, கருணாகரன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. காமெடி ப்ளஸ் த்ரில்லர் கலந்த கலவையாக இந்த படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X