என்னது... காஜல் அகர்வால் காதல் பிரேக் அப் ஆயிடுச்சா!
சென்னை: காஜல் அகர்வால் தன்னுடைய காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த நடிகை காஜல் அகர்வால் பொம்மளாட்டம் படத்தில் முதலில் நடித்தார். ஆனால் இந்த படம் தாமதமாக வெளியானது.
பரத்துடன் நடித்த பழனி படம் முதலில் வெளியானது. இதனை தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

முன்னணி ஹீரோக்களுடன்
இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் காஜல் அகர்வால்.

காதலித்திருக்கிறீர்களா?
நல்ல உடல்கட்டுடன் காண்போரை கண்ணிமைக்காமல் பார்க்க தோன்றும் அழகு பதுமையாக உள்ள காஜல் அகர்வாலிடன் தனியார் ஊடகம் ஒன்று நேர்க்காணல் செய்தது. அப்போது இவ்வளவு அழகாக உள்ள உங்களிடம் பல பேர் புரபோஸ் செய்திருப்பார்களே நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா என கேட்கப்பட்டது.

காதலித்தேன்
அதற்கு பட்டென யெஸ் நான் காதலித்திருக்கிறேன் என்று கூறினார் காஜல் அகர்வால். சினிமாவில் பல படங்களில் நான் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது ஒருவரை காதலித்தேன் என்று கூறினார்.

காதல் முறிந்துவிட்டது
அவர் சினிமா துறையை சேர்ந்தவர் அல்ல என்ற காஜல், அவருடன் நேரம் செலவிட முடியாததால் தன் காதலர் தன்னை வெறுத்து பிரேக் அப் செய்து விட்டாதாகவும் கூறினார். தனது காதல் முறிந்ததால் தான் பல நாட்கள் மிகுந்த துயரத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் கவலை
மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆனது என்றும் காஜல் அகவர்வால் கூறினார். பீக்கில் உள்ள ஒரு நடிகையான காஜல் அகர்வாலின் காதல் பிரேக் அப் ஆனது குறித்து அறிந்த அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











