காஜல் அகர்வால் நடிக்கும் உமா... இதுவரை நடித்திராத கதாபாத்திரம் !
சென்னை : நடிகை காஜல் அகர்வால் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
உமா என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் உமா கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தை பிரபல விளம்பர படங்களை இயக்கிய தாதாகாதா சின்ஹா இயக்க உள்ளார்.

ஏராளமான ரசிகர்கள்
விஜய், அஜித், தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

பிஸியாக நடித்து வருகிறார்
காஜல் அகர்வால் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியான் 2 திரைப்படத்திலும், நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா, சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா மற்றும் கோஸ்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

புதிய திரைப்படம்
தற்போது இவர் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. உமா என தலைப்பிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் உமா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.இப்படத்தை விளம்பர படங்களை இயக்கிய தாதாகாதா சின்ஹா இயக்க உள்ளார். அபிஷேக் கோஷ் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
Recommended Video

படப்பிடிப்பு
குடும்ப பின்னணி கொண்ட இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த விவரமும், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











