8 வயசு வரைக்கும் நோ மூவிஸ்.. இந்தப் படத்தைதான் முதலில் காட்டுவேன்.. காஜல் அகர்வால் க்யூட் பேட்டி!
சென்னை : நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர்.
கடந்த 2021ம் ஆண்டில் இவர் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து நடிப்பை தொடர்ந்து வருகிறார் காஜல் அகர்வால். தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடித்து வருகிறார்.

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வருகிறார். முன்னதாக விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். விஜய்யுடன் துப்பாக்கி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் விஜய் -காஜல் அகர்வால் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக காணப்பட்டது.

காஜல் அகர்வால் திருமணம்
படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காஜல் அகர்வால் கடந்த 2021ம் ஆண்டில் கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும், தன்னுடைய கர்ப்பக் காலத்தின்போதும், குழந்தை பிறந்த பின்பும் சமூக வலைதளங்களில் பிசியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் காஜல் அகர்வால்.

இந்தியன் 2 படத்தில் காஜல்
தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தில் 90 வயது கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம் காஜல் அகர்வால். சென்னை பனையூரில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், தினந்தோறும் காஜல் அகர்வால் தன்னுடைய கேரக்டருக்காக மூன்றரை மணிநேரம் மேக்கப் போட்டு வருகிறாராம். அவருடைய தோற்றம் நம்ப முடியாத அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பிசி
படங்களில் பிசியாக இருந்தபோதும், சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாகவே காணப்படுகிறார் காஜல் அகர்வால். தினந்தோறும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவுகளை போட்டு வருகிறார். தன்னுடைய மகனுடன் தான் கழித்துவரும் சிறப்பான தருணங்களையும் அவர் பதிவிட்டு வருகிறார். இந்த க்யூட் பதிவுகளுக்கு ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களையும் போட்டு வருகின்றனர். காஜல் அகர்வாலை இன்ஸ்டாகிராமில் ஏறக்குறைய 25 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர்.

மகனுக்கு காட்ட விரும்பும் படம்
இதனிடையே தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தன்னுடைய மகன் குறித்து பேசியுள்ள காஜல் அகர்வால், அவனது 8 வயதுவரை எந்தப் படத்தையும் காட்டப் போவதில்லை என்றும், அவனது 8வது வயதில் தான் நடித்த துப்பாக்கி படத்தைதான் முதலில் அவனுக்கு போட்டுக் காட்டுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டியால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தப் பேட்டியை தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











