காஜல் அகர்வால்தான் யோகிபாபுவின் ஹீரோயினா.. கோஸ்டி படத்தின் ஸ்னீக் பீக் வெளியீடு!
சென்னை : காஜல் அகர்வால், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது கோஸ்டி படம்.
ஹாரர் காமெடியாக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தில் இயக்குநர் கனவுகளோடு நடைபோடும் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரசிகர்களை கவரும் வகையில் இந்தக் காட்சிகள் அமைந்துள்ளன.

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் விஜய், அஜித், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும் தன்னுடைய உடல் அழகை சிறப்பாக பராமரித்து வரும் காஜல் அகர்வால் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக கமலுடன் இவர் நடித்துவரும் இந்தியன் 2 படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கோஸ்டி படம்
கடந்த ஆண்டில் காஜல் அகர்வாலின் ஹே சினாமிகா படம் வெளியானது. துல்கர், அதிதி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படத்தில் காஜலின் நடிப்பு தனிக்கவனம் பெற்றது. இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோஸ்டி படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

ஹாரர் காமெடி படம்
இந்தப் படம் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ளது. குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இந்தப் படத்தில் ஹாரர் காமெடியை கையில் எடுத்துள்ளார். இந்தக் கதைக்களம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. படத்தில் மேலும் கேஎஸ் ரவிக்குமார், ஊர்வசி, ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சுரேஷ் மேனன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். சமீபத்தில் மறைந்த மயில்சாமியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

கோஸ்டி படத்தின் ஸ்னீக் பீக்
படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். படத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் காவல்துறை அதிகாரியான காஜல் அகர்வாலை, தன்னுடைய படத்தில் நடிக்க யோகிபாபு உள்ளிட்டவர்கள் கேட்பதாக முதல் ஸ்னீக் பீக் காணப்படுகிறது. அவர் மறுக்க, அவர்தான் தன்னுடைய படத்தின் நாயகி என்று சபதம் இடுகிறார் யோகிபாபு. சிறிய காட்சியாக இருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் இந்தக் காட்சிகள் அமைந்துள்ளன.

மயில்சாமி இடம்பெற்ற காட்சிகள்
இதனிடையே சமீபத்தில் மறைந்த மயில்சாமி, ஊர்வசி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக்கும் தற்போது வெளியாகியுள்ளது. ஊர்வசியுடன் இயல்பாக நடித்துள்ள மயில்சாமியின் இந்தக் காட்சிகளை பார்க்கும்போது, நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்துள்ளது குறித்து மனம் வருந்துவதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் சில காலம் அவர் இருந்து தமிழில் இன்னும் அதிகமான படங்களில் நடித்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











