காஜல் அகர்வால் நடிக்கும் உமா… படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது !
சென்னை : நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி உள்ளது.
உமா என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தை பிரபல விளம்பர படங்களை இயக்கிய தாதாகாதா சின்ஹா இயக்க உள்ளார்.

ஏராளமான ரசிகர்கள்
விஜய், அஜித், தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

4 மொழிகளில்
காஜல் அகர்வால் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும், நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா, சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா மற்றும் கோஸ்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், கங்கனா ரணாவத்திற்கு தேசிய விருதை பெற்றுத்தந்த குயின் திரைப்படத்தின் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாக உள்ளது.

உமா இந்தி திரைப்படம்
தற்போது இவர் உமா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். இப்படத்தை விளம்பர படங்களை இயக்கிய தாதாகாதா சின்ஹா இயக்க உள்ளார். அபிஷேக் கோஷ் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கியது
கொரோனா தடைக்கு பிறகு இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு தற்போது கொல்கத்தாவில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் விவரங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. சுறுசுறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications