பொள்ளாச்சி சாந்தி அக்கா மெஸ்ஸில் கணவருடன் சாப்பிட்ட காஜல் அகர்வால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
சென்னை: நடிகை காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் உள்ள மெஸ் ஒன்றில் சாப்பிட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல். தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார்.
கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் தனது காதலரை கரம் பிடித்தார்.

ஹனிமூன் போட்டோஸ்
தொழிலதிபரான கவுதம் கிட்சுலுவை காஜல் அகர்வால் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற காஜல், அங்கு கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை வெளியிட்டு மிரள வைத்தார்.

பொள்ளாச்சி மெஸ்
தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் உள்ள சிறிய உணவகத்தில் கணவருடன் வந்து சாப்பிட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி சாந்தி மெஸ்
பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ்ஸில் சாப்பிட்ட காஜல் அங்கு எடுத்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மெஸ் உரிமையாளர்களான சாந்தி மற்றும் பாலகுமார் ஆகியோருடனும் காஜல் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

அன்பையும் பரிமாறுகிறார்கள்
மேலும் பொள்ளாச்சியில் எனக்கு மிகவும் பிடித்த பொள்ளாச்சி சாந்தி மெஸ். சாந்தி அக்காவும், பாலகுமார் அண்ணனும் உணவோடு சேர்த்து அன்பையும் அதிகம் பரிமாறுகிறார்கள். அதனால் தான் இந்த மெஸ் ஆரம்பித்த 27 ஆண்டுகளாக இங்கு உணவு சுவையாக இருக்கிறது.

9 வருடங்களாக
இந்த சிறிய உணவகத்துக்கு 9 வருடங்களாக நான் வந்து செல்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். காஜல் அகர்வால் ஷேர் செய்த இந்த போட்டோக்களையும் அவரது டிவிட்டையும் பலரும் ரீடிவிட் செய்து வருகின்றனர். மேலும் அவரது இந்த பதிவு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











