twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிப்பு.. பிரதமர் நிவாரண நிதி, பெப்சி, தெலுங்கு அமைப்புக்கு நடிகை காஜல் அகர்வால் உதவி!

    By
    |

    சென்னை: கொரோனா பாதிப்பை அடுத்து நடிகை காஜல் அகர்வால், பிரதமர் நிவாரண நிதி மற்றும் சினிமா தொழிலாளர்கள் அமைப்புக்கு நிதி உதவி அளித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    Actress Kajal Aggarwal donates FEFSI

    சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. தினசரி சம்பளம் வாங்கும் சினிமா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சிக்கு உதவினர். சமீபத்தில் நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினார். இப்போது நடிகை காஜல் அகர்வால் நிதி உதவி வழங்கியுள்ளார்.

    அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும் தென்னிந்திய திரைப்பட சம்மேளமான பெப்சிக்கு ரூ.2 லட்சமும் தெலுங்கு திரைப்பட கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 2 லட்சமும் மகாராஷ்டிர அரசுக்கு ரூ.1 லட்சமும் வழங்கியுள்ளார். இதுதவிர தான் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.

    English summary
    Actress Kajal aggarwal has donated for PM cares fund and fefsi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X