‘இந்தியன்2’ படப்பிடிப்புக்கு ரெடியான காஜல் அகர்வால்..ஆரம்பமே அசத்தல் தான் போங்க!

சென்னை : நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தீவிரமாக ரெடியாகி வருகிறார்.

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் ஆரம்பமாகியது. கமல்ஹாசன் இந்த வாரம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்தியன் 2

இந்தியன் 2

இயக்குநர் ஷங்கர் எஞ்சியிருக்கும் காட்சிகளைப் படமாக்க போடப்பட்ட பட்ஜெட்டில் பெரும் தொகையை குறைத்துவிட்டாராம். அதனால் தயாரிப்பு நிறுவனமும் அந்தத் தொகையை உடனடியாக வழங்கத் தயாராக உள்ளது. சென்னையில் இப்படத்திற்காக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பிரம்மாண்ட அரங்கம் தயாராகி வருகிறது. அதில் படத்தின் பல முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்துத் தருவதாக ஷங்கர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் படப்பிடிப்பு

மீண்டும் படப்பிடிப்பு

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் பரவிய நிலையில், புதிய போஸ்டரை வெளியிட்டு இந்தியன் 2 படத்தில் நடிப்பதை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தினார். இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில்,இன்னும் 30 சதவீத படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. மேலும், விவேக் மற்றும் நெடுமுடி வேணு இறந்துவிட்டதால் அவர்களின் காட்சியும் மீண்டும் எடுக்கப்பட உள்ளது.

கடினமாக உள்ளது

கடினமாக உள்ளது

இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குழந்தை பிறப்புக்கு பிறகு, எனது ஆற்றல் நிலைகளை திரும்பப் பெறுவது கடினமாக உள்ளது. குதிரையில் ஏறுவது ஒருபுறம் இருக்கட்டும். அது ஒரு பெரிய பணியாகத் தோன்றியது. முன்பு எனக்கு மிக எளிதாக வந்த தற்காப்புக் கலைப் பயிற்சியால் என் உடல் எதிர்ப்பு தெரிவித்தது.

நான் அதிர்ஷ்டசாலி

நான் அதிர்ஷ்டசாலி

இந்தியன் 2 படத்தில் உங்களுடன் மீண்டும் பயிற்சியில் குதித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வேலையில் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், பின்னர் அவற்றை பொழுதுபோக்காகப் பின்பற்றுவதற்கும் ஊக்கமளித்தார். இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி. தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும், என்னை மேம்படுத்தவும் இது ஒரு வாய்ப்பு என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X