குடும்பத்துடன் செட்டில் ஆன காஜல் அகர்வால்.. இந்தியன் 2 படத்தில் அவருக்கு பதில் யார் தெரியுமா?

சென்னை : நடிகை காஜல் அகர்வால் இறுதியாக கோமாளி படத்தில் நடித்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து அவர் நடித்திருந்தார்.

இதையடுத்து அவர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் இணைந்திருந்தார்.

இதனிடையே அவருக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்துள்ள நிலையில் அவர் படத்திலிருந்து விலகியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து கோலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இவர் அறிமுகமானது ஹோ கயா நா என்ற பாலிவுட் படத்தில். இந்தப் படம் கடந்த 2004ல் வெளியானது. இதில் ஐஸ்வர்யாவின் தோழியாக இவர் நடித்திருந்தார்.

2007ல் தெலுங்கில் அறிமுகம்

2007ல் தெலுங்கில் அறிமுகம்

பின்னர் கடந்த 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்குப் படத்தின்மூலம் இவர் தென்னிந்திய மொழிகளில் அறிமுகமானார். தொடர்ந்து சந்தமாமா, பவ்ருடு, ஆட்டாடிஸ்டா என்ற திரைப்படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து 2008ல் பழனி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பழனி படத்தில் அறிமுகம்

பழனி படத்தில் அறிமுகம்

அதே ஆண்டில் சரோஜா, பொம்மலாட்டம் போன்ற திரைப்படங்களும் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இதையடுத்து தமிழில் இவருக்கு சிறப்பான அடையாளம் கிடைத்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நடித்துவந்த இவருக்கு சிறப்பாக அமைந்த படம் மாவீரன். இந்தப் படம் இவருக்கு ஜாக்பாட்டாக அமைந்தது.

விஜய்யுடன் 3 படங்கள்

விஜய்யுடன் 3 படங்கள்

தொடர்ந்து கார்த்தியுடன் நான் மகான் அல்ல, சூர்யாவுடன் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் படங்களில் இவர் இணைந்து நடித்துள்ளார். இதேபோல அஜித்துடன் விவேகம் படத்திலும் இவர் நடித்துள்ளார். இதுபோல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன்மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

திருமணம்.. குழந்தை

திருமணம்.. குழந்தை

இவ்வாறு சிறப்பாக நடித்துவந்த இவர் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பான வகையில் செட்டில் ஆகியுள்ளார்.

இந்தியன் 2 படம்

இந்தியன் 2 படம்

இவர் இறுதியாக கோமாளி என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தியன் 2 படத்திலும் இவர் கமிட்டாகியிருந்த நிலையில், இவர் கர்ப்பமானதை அடுத்து அதிலிருந்து விலகினார். இந்நிலையில் தற்போது இவருக்கு பதிலாக பாலிவுட் நடிகைகளை களமிறக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

தீபிகா.. கத்ரினா?

தீபிகா.. கத்ரினா?

காஜல் அகர்வாலுக்கு பதிலாக தீபிகா படுகோனே அல்லது காத்ரினா கையிப் இந்தியன் 2 படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டுள்ளது. தற்போது ராம்சரண் படத்தை இயக்கிவரும் ஷங்கர், அந்தப் படத்தை முடித்துக் கொண்டு இந்தப் படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Grandma Movie Review | Yessa ? Bussa ?|Sonia Aggarwal | Vimala Raman *Review
அமெரிக்காவில் கமல்ஹாசன்

அமெரிக்காவில் கமல்ஹாசன்

இந்தியன் 2 படத்தின் பணிகளுக்காகவே தற்போது அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார் கமல்ஹாசன். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய படமாக அமைந்தது. அதே அனுபவத்தை இந்தியன் 2 படத்திலும் ரசிகர்கள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X