மொபைல் கேம் விளையாடி பார்வையை இழந்த பிக் பாஸ் நடிகை... ரசிகரிடம் உருக்கம்!
பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை காஜலுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை காஜல், மொபைல் கேம் விளையாடியதால் பார்வை பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை காஜல் பசுபதி. இவர் சிம்பு, ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானதை அடுத்து, இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. அதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் மட்டும் நடித்து வந்தார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர் காஜல். ஆனால் கடந்த சில நாட்களாக அவரை சமூக வலைதளப் பக்கம் அதிகம் பார்க்க முடியவில்லை. இதுகுறித்து அவரது ரசிகர் ஒருவர் காஜலுக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துள்ள அவர், மொபைல் கேம் விளையாடி கண் பார்வை காலியாகிடிச்சு. மொபைலை தொடக்கூடாதுன்னு டாக்டர் ஸ்டிரிக்டா சொல்லிட்டார் என பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள், காஜலுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











