Kajol: பட்டம் பெற்ற கஜோலின் மகள்.. எல்லையில்லா மகிழ்ச்சி என இன்ஸ்டாவில் பதிவு!
சென்னை: பாலிவுட்டில் கொடி கட்டிப்பறந்த நடிகை தான் கஜோல். இவர் பாலிவுட் ஸ்டார், ஷாருக்கான், சல்மான், அமீர் கான், அஜய் தேவ்கன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழில் அரவிந்த் சாமி, பிரபுதேவா நடித்த மின்சார கனவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் இடம் பெற்ற வெண்ணிலவெ வெண்ணிலவே பாடல் இன்று வரையும் அனைவருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது. இந்த படம் மட்டுமில்லாமல், தனுஷ் நடித்த விஜபி படத்திலும் நடித்திருந்தார் கஜோல்.
இவர், பாலிவுட் ஸ்டார் நடிகரான அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 22 வயதில் நைசா என்கிற மகளும், 14 வயதில் யுக் தேவ்கன் மகனும் உள்ளனர். பிரபலங்களின் குழந்தைகள் என்பதால், இவர்களின் போட்டோக்கள் இணையத்தில் அவ்வப்போது டிரெண்டாகும். அந்த வகையில் தற்போது, சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரீக்ஸ் நகரில் உள்ள க்ளியோன் உயர்கல்வி நிறுவனத்தில் நைசா தேவ்கனின் பட்டமளிப்பு விழா, வீடியோவை காஜோல் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கஜோலின் மகள்: மாண்ட்ரீக்ஸ் ஏரிக்கரையின் அழகிய பின்னணியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், நைசா ஊதா நிற சேலையில் பட்டம் பெற்றுள்ளார். நீல நிற சேலையில் வந்திருந்த காஜோல், உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தார். அஜய் மற்றும் மகன் யுக் ஆகியோர் நேர்த்தியான உடையில் அணிந்து உள்ளனர். இந்த வீடியோவை வெளியிட்ட காஜோல், "இது மிகவும் சிறப்பான தருணம், பெருமையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். தனது மகள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
நடிப்பில் விருப்பம் இல்லை: முன்னதாக பேட்டி அளித்த காஜோல், அவளுக்கு நடிப்பின் மீது விருப்பம் இல்லை. என் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார். அண்மையில், நைசா பிறந்த நாள் பார்ட்டியை முடித்துவிட்டு வெளியே நடக்கவே முடியாதபடி குடிபோதையில் தள்ளாடிக்கொண்டே நடந்து வந்து காரில் ஏறிச்சென்றார். இது இணையத்தில் வைரலானது. இணையவாசிகள் பிரபலங்களின் குழந்தைகள் மது அருந்துவது, போதை வஸ்துக்களை பயன்படுத்துவது எல்லாம் சாதாரணமாகிவிட்டது. நடிகர்களின் கலாச்சாரமே வேறு, தினமும் பார்ட்டி, பப் என போனால் குழந்தைகளும் அதைத்தான் செய்வார்கள் என்றும், நைசாவின் பெற்றோரான கஜோல் மற்றும் அஜய் தேவ்கனை திட்டித்தீர்த்தார்கள்.


Click it and Unblock the Notifications











