Kajol: அம்மாவின் அழகை தூக்கி சாப்பிடும் அளவுக்கு கவர்ச்சியில் காட்டும் கஜோல் மகள்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்
சென்னை : பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகர் கஜோல். இவர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.
திருமணம், குழந்தைகள் என்று ஒருபுறம் வாழ்க்கை தொடர்ந்தாலும் திரைப்படங்களிலும் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் மின்சாரக் கனவு படத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி ஆகியோருடன் இணைந்து நடித்த கஜோல், சமீபத்தில் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் நடித்திருந்தார்.

நடிகை கஜோல்
நடிகை கஜோல் பாலிவுட் குயின்களின் வரிசையில் இடம் பெற்றவர். ஷாருக்கான் -கஜோல் ஜோடி பாசிகர் படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 90களின் காலகட்டத்தில் ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்த கஜோல் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து 1999ம் ஆண்டில் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

நைசாவின் எல்லைமீறிய கவர்ச்சி
இவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வந்தனர். கஜோலின் மகள் நைசாவும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் நைசா, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்வகையில் தொடர்ந்து கவர்ச்சியான உடைகளில் வலம் வருகிறார். கடந்த டிசம்பரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போதும் இவர் எல்லை மீறிய கவர்ச்சியான உடையில் பார்ட்டி ஒன்றில் கலந்துக் கொண்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்தது.

48 வயதிலும் கனவுக்கன்னி
கஜோலிற்கு தற்போது 48 வயது ஆகிறது. ஆனாலும் 30 வயது பெண்ணைப் போன்ற தோற்றத்தில்தான் அவர் காணப்படுகிறார். தமிழில் பிரபுதேவா, அரவிந்த் சாமியுடன் இணைந்து மின்சாரக் கனவு படத்தில்தான் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் சூப்பர்ஹிட்டடித்தது. இருந்தபோதிலும் தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் தனுஷுடன் இணைந்து இவர் நடித்திருந்த விஐபி 2 படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

தனுஷுடன் ரீ-என்ட்ரி
ஆனாலும் வேலையில்லா பட்டதாரி 2 படம் வெற்றிப் பெறவில்லை. இதனால் தமிழில் அடுத்தடுத்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கஜோலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனிடையே அவரது மகள் நைசா படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் அஜய் தேவ்கனும் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான போலா படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது.

மகளுடன் கவர்ச்சிப் புகைப்படங்கள்
இதனிடையே நடிகை கஜோல் தன்னுடைய மகளுடன் இணைந்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதில் யார் அதிக கவர்ச்சி காட்டுவது என்று இருவருக்கும் போட்டியே நடந்திருக்கும் என தெரிகிறது. என்னுடைய மினி மற்றும் நான் என்று இந்தப் புகைப்படங்களுக்கு கஜோல் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். தனித்தனியாகவும் இவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











