மன விரக்தியால் நடிகை கஜோல் எடுத்த திடீர் முடிவு… பதறிப்போன ரசிகர்கள்!
சென்னை : பாலிவுட் நடிகை கஜோல் தனது இன்ஸ்டாகிராமில் வாழ்க்கையில் கடினமான சோதனையை எதிர்கொள்கிறேன் என பதிவிட்டுவிட்டு, சோஷியல் மீடியாவில் இருந்து விலகி உள்ளார்.
நடிகை கஜோல் அனைவரும் விரும்பக்கூடிய நடிகைகளில் ஒருவராக வருகிறார். தனது அற்புதமான நடிப்புத் திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பல வருடங்களாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ராசியான ஹீரோயின்களில் நடிகை கஜோலுக்கு தான் முதல் இடம்.

பாஸிகர் ஹீரோயின் : நடிகை கஜோல் பகுடி என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின், ஷாருக்கானுடன் இணைந்து பாஸிகர் படத்தில் நடித்தார். இந்த பட பாலிவுட் சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமான திரைப்படமாக தற்போது வரை இருந்து வருகிறது. அதே போல கஜோல் ஷாருக்கனுடன் இணைந்து நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே பல ஆண்டுகளுக்கு மேல் தியேட்டரில் ஓடியது.
அனைவருக்கும் பிடித்த நடிகை : இப்படி பாலிவுட்டில் மாஸ் காட்டி வந்த கஜோல், மின்சார கனவு படத்தில் நடித்து தமிழ் ஆடியன்சின் மனதில் இடம்பிடித்தார். தமிழில் அவர் ஒரு படம் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் இன்று வரை மறக்கவில்லை. நடிகை கஜோல் பல ஆண்டுகளுக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். அப்போது கஜோல் வந்த காட்சிக்கு கைத்தட்டல்கள் பறந்ததை இதற்கு சாட்சி.

காதல் திருமணம் : Gundaraj என்ற படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்த போது காதலிக்கத் துவங்கினார்.இதையடுத்து, 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அஜய் தேவ்கனின் வீட்டில் திருமணம் நடந்தது. கஜோல், அஜய் தேவ்கனுக்கு நியாசா என்கிற மகளும், யுக் என்கிற மகனும் இருக்கிறார்கள். கஜோலுக்கும், அஜய் தேவ்கனுக்கும் திருமணமாகி 24 ஆண்டுகள் ஆனபோதும், சந்தோஷமாகவே இருந்து வருகிறார்கள்.
ரசிகர்கள் அதிர்ச்சி : இந்நிலையில், நடிகை கஜோல் "என் வாழ்க்கையின் கடினமான சோதனையை எதிர்கொள்கிறேன்" என பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் இருந்து அனைத்து பதிவு மற்றும் புகைப்படங்களையும் நீக்கி உள்ளார். மேலும், சோஷியல் மீடியாவில் அதிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார். நடிகை கஜோலின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவரின் தீவிர ரசிகர்கள் சிலர் எதுவாக இருந்தாலும் தைரியமாக இருங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications