கணவர் அஜய் தேவ்கன் குறித்து வரும் அப்படி இப்படி செய்தி.. கஜோல் ரியாக்‌ஷன் என்னங்க இப்படி இருக்கு!

மும்பை: தமிழ் சினிமாவில் எப்படி சூர்யா, ஜோதிகா ஜோடி அனைவரது அன்பைப் பெற்ற ஜோடியாக உள்ளார்களோ அதேபோல் பாலிவுட்டில் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியைக் கூறலாம். இருவரும் 1999 இல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கும் போதே கஜோல் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். கஜோல் நேற்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

கஜோல் திருமணத்திற்குப் பின் ஒரு வருடம் மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்டு, அதன் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். கஜோலுக்கு நல்ல நல்ல பட வாய்ப்புகள் வரும் போது திருமணம் என்பது தவறான முடிவு என்று பலரும் அறிவுரை கூறியுள்ளனர். திருமணத்திற்கு குடும்பத்தினர் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அஜய் தேவ்கன் மீது இருந்த காதலில் அவர் இருந்த உறுதியில் இருந்து அவர் பின் வாங்கவே இல்லை.

Kajol Ajay Devgan

கஜோல் தனது தந்தையிடம் தான் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொள்வதாக கூறிய பின்னர், அவரது தந்தை கஜோலிடம் ஒருவாரம் பேசவில்லையாம். மேலும் ஏன் இவ்வளவு சீக்கிரம் திருமணம் என்று கேட்டுள்ளார். அதற்கு, அஜய் தேவ்கனுடன் குடும்ப வாழ்க்கை நடத்த விரும்புவதாக கஜோல் தெரிவித்துள்ளார். கஜோல் விரும்பியபடியே அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இன்று வரை உள்ளது. ஒருமுறை கஜோல் தனது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான காரணத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

வாயாடி கஜோல்: அதாவது, திருமணத்திற்கு முன்பு நான்கு வருடங்கள் காதலித்து வந்தோம். திருமணத்திற்கு பிறகும் அன்புடன் இருக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் நண்பர்களைப் போல் இருக்கின்றோம். நான் எப்போதும் எதாவது பேசிக்கொண்டே இருப்பேன். அஜய் அமைதியாக கேட்டுகொண்டே இருப்பார். அஜய் அதிகம் பேசாததுதான் எங்கள் மகிழ்ச்சியான உறவின் ரகசியம் என்று கஜோல் கேலியாகக் கூறினார். ஆனால் கஜோல் எப்போதும் எதாவது பேசிக்கொண்டே இருப்பதால், நான் சில நேரங்களில் அவர் பேச்சினை கவனிக்கமாட்டேன் என அஜய் தேவ்கன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Kajol Ajay Devgan

காதல் டூ கல்யாணம்: அஜய் ஒருமுறை கஜோல் மீது காதல் எப்படி தோன்றியது என்பது குறித்து பேசியுள்ளார். இருவரும் ஒருவரையொருவர் சினிமா செட்டில் சந்தித்துள்ளனர். மிக விரைவாகவே இருவரும் ஜெல் ஆகிவிட்டதாகவும், எந்த ப்ளான்களுமே இல்லாமல், டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாகவும் கூறினார். பின்னர் திருமணம் செய்து கொண்டதாகவும் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். இருவரும் பியார் தோ ஹோனா ஹி தா, இஷ்க், தில் கியா கரே மற்றும் ராஜு சாச்சா போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான Tanji The Unsung Warrior திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

நடிகை & குடும்பத்தலைவி: கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் தற்போது நடிப்பில் மிகவும் தீவிரமாக உள்ளனர். கஜோல் இப்போது வருடத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த தம்பதியருக்கு நைசா மற்றும் யுக் அஜா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கஜோல் குடும்ப வாழ்க்கைக்கும், படங்களில் நடிப்பதற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து ஒரு வெற்றிகரமான குடும்பத்தலைவியாகவும், நடிகையாகவும் வலம் வருகின்றார்.

Kajol Ajay Devgan

நச் பதில்: திருமணத்திற்கு பிறகு அஜய் தேவ்கன் பற்றி பல கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு கஜோல் ஒருமுறை தனது ஸ்டைலில் நச்சென பதிலளித்தார். ​ அதாவது, வதந்திகளை நான் நம்பவில்லை. ஏனென்றால் படத்தின் படப்பிடிப்பு எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அடிப்படை புரிதல் இல்லாமல் திருமண வாழ்க்கையைத் தொடர முடியாது. எனவே வதந்திகள் பரப்பும் பேச்சுக்கள் குறித்து நான் என்றைக்கும் கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளார். அஜய் தேவ்கன் கடைசியாக நடித்த படம் ஷைத்தான். இப்படத்தில் ஜோதிகா, மாதவன் உள்ளிட்டோர் நடித்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X