சங்கி மங்கி கொண்டையில்.. நாக்கை வெளியில் நீட்டி..கஜோலின் வித்தியாசமான பிக்ஸ் !
மும்பை: நடிகை கஜோல் இந்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.
நடிப்பு நடனம் என அனைத்திலும் திறமை மிக்க நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கஜோல் தமிழில்" மின்சார கனவு" என்ற திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர்.
இந்நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சங்கி மங்கி ஹேர் ஸ்டைலுடன் வித்தியாசமான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மறந்திருக்க மாட்டார்கள்
ஹிந்தியில் ஷாருக்கான், ரித்திக் ரோஷன், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த கஜோலை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

தனி ரசிகர் கூட்டமே
தமிழில் இவர் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் இன்றளவும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. அந்த அளவிற்கு ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் கஜோல்.

பாலிவுட் ரசிகர்களை
நடிப்பு, நடனம் என அனைத்திலும் கைதேர்ந்தவரான கஜோல் தனது துடிப்பான நடிப்பின் மூலம் பல ஆண்டுகளாக பாலிவுட் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார்.

வெண்ணிலவே வெண்ணிலவே
இந்தியில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள கஜோல் தமிழில் "மின்சார கனவு " என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். துடிப்பான நடிப்பு, பேசும் கண்கள், வசீகரிக்கும் நடனம் என மின்சார கனவு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிப்போன கஜோலின் "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடல் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட்டாக இருக்கிறது.

மீண்டும் என்ட்ரி
அதன்பிறகு தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் "வேலையில்லா பட்டதாரி 2" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தனது வருகையை தந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ள வித்தியாசமான புகைப்படம் ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிற

ஃபண்ணி புகைப்படம்
வடிவேலுவுக்கு இருக்கின்ற நீண்ட கொண்டையை போல, கஜோலும் தனது தலையில் சங்கி மங்கி ஹேர் ஸ்டைலுடன், நாக்கை க்யூட்டாக வெளியில் துரித்தியவாறு வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படம் இப்பொழுது பலரையும் ரசிக்க வைத்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











