அய்யோ குழந்தை மட்டும் பிறந்துவிட்டால்.. அவரை டைவர்ஸ் செய்ய இதுவே காரணம்.. பிரபல நடிகை ஓபன் டாக்

மும்பை: அனுராக் காஷ்யப் பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுப்பார்கள். இயக்கத்தில் எப்படி பிரபலமாக இருக்கிறாரோ அதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது முன்னாள் மனைவியும், நடிகையுமான கல்கி கோச்லின் கொடுத்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.

Paanch படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுராக் காஷ்யப் அதன் பிறகு அவர் இயக்கிய Black Friday,நோ ஸ்மோக்கிங், ரிட்டர்ன் ஆஃப் ஹனுமான், தேவ் டி உள்ளிட்ட படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் இயக்கியதிலேயே பெஞ்ச் மார்க்காக கருதப்படுவது கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் திரைப்படம். அந்தத் திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்க்க சிறந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் அனுராக் காஷ்யப். அவரது இயக்கத்தில் நடித்தால் சிறந்த நடிகராக வரலாம் என்ற எண்ணம் பல கலைஞர்களிடம் இருக்கிறது.

அனுராக்கின் கென்னடி: அவர் கடைசியாக ராகுல் மற்றும் சன்னி லியோனை வைத்து கென்னடி என்ற படத்தை இயக்கியிருந்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட் நைட் ஸ்க்ரீனிங்கில் படம் திரையிடப்பட்ட பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது. அதற்கு அடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் படத்தில் அனுராக் காஷ்யப்பின் டச் ஆங்காங்கே இருந்ததாகவும்; இன்னுமொரு படத்தில் அவர் தரமான கம்பேக் கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கூறினர்.

Actress Kalki Koechlin reveals the reason behind her divorce from Anurag Kashyap
Photo Credit:

நடிகர் அனுராக்: இதற்கிடையே அனுராக் காஷ்யப் நடிகராகவும் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் தமிழில் அவர் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு டீசண்ட்டாகவே இருந்தது. நயன்நதாராவும், அதர்வாவும் லீடு ரோல் செய்திருந்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அனுராக்குக்குள் நல்ல நடிகர் இருப்பதை திரையுலகத்தினரும், ரசிகர்களும் கண்டுகொண்டனர். அதனையடுத்து அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தன.

திருமண வாழ்க்கை: இதற்கிடையே அவர் நடிகை கல்கி கோச்லின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே அவர்களுக்கு விவாகரத்து நடைபெற்றது. அந்த விவாகரத்துக்கு பலரும் பலவிதமான காரணங்களை சொன்னார்கள். இந்நிலையில் அனுராக்குடனான விவாகரத்து குறித்து நடிகை கல்கி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார்.

கல்கியின் பேச்சு: அவர் அளித்த பேட்டியில், "என்னுடைய பெற்றோர்கள் மாறி மாறி சண்டை போட்டு அவர்களது வாழ்க்கையை அழித்துக்கொண்டார்கள். இவர்களுடைய சண்டையால் 13 வயதிலிருந்தே எனக்கு மன உளைச்சல் வந்தது. வாழ்க்கையும் கேள்விக்குறியானது. அதற்கு பிறகு என்னுடைய எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர்கள் பிரிந்து நன்றாகவே வாழ்ந்தார்கள். நானும் என்னுடைய எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முன்னேறினேன்.

இதனால்தான் விவாகரத்து: எனது பெற்றோரின் சண்டை, எனது சிறு வயது மன அழுத்தம் எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. எனக்கு திருமணமான சில நாட்களிலேயே எனக்கும் அனுராக்குக்கும் சண்டை நாளுக்கு நாள் வலுத்தது. எனது சிறுவயது மன அழுத்த நாட்கள் எல்லாம் எனது கண் முன்னே வந்து போனது. எனக்கு குழந்தை பிறந்தால் அந்த வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என தோன்றியது. அதனை மனதில் வைத்துதான் விவாகரத்து செய்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X