ஹீரோயின் ஆகும் இவர், யார் மகளென்று தெரிகிறதா?

By

திருவனந்தபுரம்: மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீமயி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

கே.பாக்யராஜின் சின்ன வீடு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கல்பனா. தொடர்ந்து, திருமதி ஒரு வெகுமதி, சிந்து நதிப்பூ, சதி லீலாவதி, பம்மல் கே.சம்பந்தம் உட்பட பல படங்களில் நடித்தார். ஏராளமான மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

Actress Kalpana’s daughter makes Mollywood debut
இவர், நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோரின் சகோதரி.

கடந்த 2016 ஆம் ஆண்டு, தோழா படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றிருந்த கல்பனா, மயங்கிய நிலையில் தனது அறையில் கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மலையாள திரைப்பட இயக்குனர் அனில்குமாரை கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்த கல்பனா, கடந்த 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஸ்ரீமயி என்ற மகள் இருக்கிறார்.

இவர் இப்போது கிஸ்சா என்ற மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஸ்ரீமயி. மகாரூப் முத்து இயக்கும் இந்தப் படத்தில் அனார்கலி மரக்கார், ஹரிகிருஷ்ணன், சுதீஷ், இர்ஷத், மேகா உட்பட பலர் நடிக்கின்றனர். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது.

More from Filmibeat

Read more about: heroine actress
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X