தனுஷ் பட இயக்குநரை ரகசிய திருமணம் செய்த தன்யா.. அவதூறாக பேசிய நடிகை பகிரங்க மன்னிப்பு!

சென்னை: தனுஷ் பட இயக்குநர் பாலாஜி மோகனை, நடிகை தான்யா ரகசியமாக திருமணம் செய்து கொண்ட விவகாரம் குறித்து, அவதூறாக பேசிய தெலுங்கு நடிகை பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாக நடித்திருந்தவர் தன்யா. இவர் அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்திலும், நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார்.

Actress Kalpika apologized for criticizing Dhanush movie director Balaji Mohan

தற்போது தமிழில் படவாய்ப்பு இல்லாததால், டோலிவுட்டிற்கு சென்ற தன்யா, தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ரகசிய திருமணம்: கடந்த ஆண்டு தெலுங்கு நடிகை கல்பிகா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு, நடிகை தன்யா, திரைப்பட இயக்குநர் பாலாஜி மோகனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வருவதாகவும், அந்த இயக்குநர் தன்யாவை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும் இயக்குநர் பாலாஜி மோகன் மீது குற்றம்சாட்டி இருந்தார்.

நடிகை மீது வழக்கு: இதையடுத்து, இயக்குநரும் தயாரிப்பாளருமான பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும், எங்களின் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பேசி வருவதாகவும் நடிகை கல்பிகா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார்.

Actress Kalpika apologized for criticizing Dhanush movie director Balaji Mohan

வழக்கு முடிக்கப்பட்டது: இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை கல்பிகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இயக்குநர் பாலாஜி மற்றும் தன்யா பற்றி அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்ட வீடியோக்களை நீக்கி விட்டதாகவும், அதற்காக மன்னிப்புக்கோரிய வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து நீதிபதிகள் அந்த வழக்கை முடித்துவைத்தனர்.

பகிரங்க மன்னிப்பு: இதுகுறித்து தெலுங்கு நடிகை கல்பிகா வெளியிட்ட வீடியோவில், தன்யா மற்றும் பாலாஜி மோகன் பற்றி அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் மீது நான் சுமத்திய குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை, அவை பொய்யானவை, அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலத்திலும் அவர்கள் குறித்து அவதூறாக எதையும் பேச மாட்டேன் என்று வீடியோவில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X