Don't Miss!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சூப்பர்ஸ்டார் மகனுடன் காதல்.. ஒரு படம்கூட ரிலீசாகல அதுக்குள்ள காதல் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலின் மகன் பிரணவை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக அறிமுகமாக உள்ள பிரபல வாரிசு நடிகை ஒருவர், அதற்குள் காதல் கிசுகிசுவில் சிக்கி விட்டார்.
பெரும் எதிர்பார்ப்போடு தமிழில் அறிமுகமாகிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன் - லிசி தம்பதியினரின் மகளான கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் தவிர சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அப்படம் டிராப் ஆகிவிட்டது. தமிழ் தவிர சில மலையாளப் படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
பிரபல நட்சத்திர ஜோடியின் மகள் என்பதால், அவரது படங்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு உள்ளனர். தமிழில் இன்னமும் ஒரு படம் கூட ரிலீசாகாவிட்டாலும், அவருக்கென தனி ரசிகர் வட்டம் இப்போதே உருவாகி விட்டது. தமிழில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறார் கல்யாணி.
காதல் சர்ச்சை
ஆனால், எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கும் வகையில் திடீரென காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் கல்யாணி. அவரது காதல் விஷயம் பற்றி புதிய கிசுகிசு ஒன்று பரவி வருகிறது.
மோகன் லால் மகனுடன் காதல்
அதாவது, முன்பொரு பேட்டியில், "நான் யாரை காதலிக்கிறேன் என்று குடும்பத்தினருக்கு தெரியும்" எனக் கூறியிருந்தார் கல்யாணி. அதை வைத்து அவர் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோஹன்லாலின் மகன் பிரணவ் மோகன்லாலைத் தான் காதலிக்கிறார் என பலரும் பேசி வருகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
விளக்கம் அளிப்பாரா?
வளரும் நடிகையான கல்யாணி ஆரம்பத்திலேயே இப்படி ஒரு காதல் சர்ச்சையில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. இது தொடர்பாக கல்யாணி உரிய விளக்கம் அளித்தால் தான் அவரது எதிர்காலத்திற்கு நல்லது.