பிரபல நடிகையை விவாகரத்து செய்ததது உண்மைதான்.. உறுதி செய்தார் பிக்பாஸில் கலந்து கொண்ட இயக்குனர்!

By

சென்னை: பிரபல நடிகையை தான் விவாகரத்து செய்துவிட்டதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கணவர் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி. பிறகு ஹீரோயினாக நடித்தார்.

தேவராகம், குருசிஷ்யன், பைவ் ஸ்டார் ஹாஸ்பிடல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

விக்ரமின் காசி

விக்ரமின் காசி

காவேரி மற்றும் கல்யாணி என்ற பெயர்களில் நடித்து வந்த அவர், விஜய்யின் கண்ணுக்குள் நிலவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். அதன் பின் பிரசாந்தின் அப்பு, பிரபுதேவாவின் பெண்ணின் மனதை தொட்டு, நினைக்காத நாளில்லை, விக்ரம் பார்வையற்றவராக நடித்த காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

சூரிய கிரண்

சூரிய கிரண்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த கல்யாணி, சன் டிவியில் ஒளிபரப்பான தியாகம் தொடரிலும் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் நடித்திருந்தார். இவர், தெலுங்கு படங்களில் நடித்த போது இயக்குனரும் நடிகருமான சூரியகிரண் மீது காதல் கொண்டார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சூரியகிரண், குழந்தை நட்சத்திரமாகவே தென்னிந்திய மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சத்யம், பிரம்மாஸ்தரம், ராஜூ பாய் உள்பட சில படங்களை இயக்கினார். பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரிந்துவிட்டதாகவும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

உண்மைதான்

உண்மைதான்

இதற்கிடையே, அது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார் சூரிய கிரண். இவர், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியேறினார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கல்யாணி சில ஆண்டுகளுக்கு முன் என்னை பிரிந்துவிட்டார். ஆனாலும் அவரை இன்னும் நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சொந்த காரணங்கள்

சொந்த காரணங்கள்

அவர் தன்னை பிரிந்ததற்கு அவருக்கு சொந்த காரணங்கள் இருக்கலாம் என்றும் அது தன் முடிவல்ல என்றும் தான் இப்போதும் மொபைல் போனிலும் லேப்டாப்பிலும் அவர் புகைப்படங்களையே வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் இல்லாமல் வேறு யாருடனும் என்னால் வாழ்க்கையை கழிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X