Kanaka - நான் எதுக்குங்க பதுங்கி உட்கார்ந்து இருக்கணும்..அந்த வயசு இல்ல..பட்டாசாய் வெடிக்கும் கனகாவின் பேச்சு
சென்னை: Kanaka(கனகா) நான் எதற்காக பதுங்கி இருக்கணும் என கனகா பேசியது இணையத்தில் மீண்டும் ட்ரெண்டாகியிருக்கிறது.
நடிகை கனகா 80கள் இறுதியில் சினிமாவில் நுழைந்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் அறிமுகமான கரகாட்டக்காரன் படம் மெகா ஹிட்டானதை அடுத்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. தனது தாயான தேவிகா போலவே கனகா சினிமாவுக்குள் பறக்க ஆரம்பித்தார். அதன்படி ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

தாயார் மரணம்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அறிமுகமாக பல படங்களில் நடித்த கனகாவுக்கு வாழ்க்கையில் ஒரு இடி இறங்கியது. அது என்னவென்றால் அவரது தாய் தேவிகாவின் மரணம். தேவிகாதான் கனகாவுக்கு எல்லாமே. அதனால் தேவிகா உயிரிழந்ததை கனகாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதற்கிடையே தனது தந்தை தேவதாஸுடனும் மோதல் ஏற்பட்டது.
காதல் தோல்வி?: அதுமட்டுமின்றி தன்னுடைய மேனேஜர் தன்னை ஒருதலையாக காதலித்ததை கனகா விரும்பவில்லை. அதனால் அந்த மேனேஜர் தற்கொலை செய்துகொண்டார். அதுவும் அவரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும்; கலிஃபோர்னியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் பாதியில் முடிந்தது என பல பிரச்னைகளை அவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.
தனிமையில் கனகா: நிலைமை இப்படி இருக்க கனகா தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் வீட்டில் அவர் மட்டுமே வசித்துவருகிறார். அவர் சினிமா சார்ந்த யாரையுமே சந்திப்பது இல்லை. இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் அவரை சந்தித்தார். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
கனகா பேட்டி: இந்நிலையில் நடிகை கனகா 10 வருடங்களுக்கு முன்பு அளித்திருந்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "எனது வீட்டில் நான் சுதந்திரமாக அமர்ந்திருக்கிறேன். கதாநாயகியாக நடிக்கும் வயதை தாண்டிவிட்டதால் நான் சும்மா உட்கார்ந்திருக்கிறேன். இதில் என்ன தப்பு இருக்கிறது.
விளையாட சொல்றீங்களா: ஏங்க நான் ஏன் பதுங்கி உட்கார்ந்திருக்கணும். நான் என்ன ஸ்போர்ட்ஸ் ஸ்டாரா. சானிய மிர்சா மாதிரி டென்னிஸ் விளையாட சொல்றீங்களா. எனது வீட்டில் நான் இருக்கிறேன். இதில் இவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கு என்று எனக்கு தெரியவில்லை" என்றார். முன்னதாக கனகாவை சந்தித்தபோது குட்டி பத்மினியிடம் அவர், தனது தந்தையுடனான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











