twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘சோகம்.. அவமானம்.. கொஞ்சம் கூட நியாயமே இல்ல..’ பிரதமர் மோடியின் முடிவால் செம கடுப்பில் பிரபல நடிகை!

    |

    மும்பை: வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டது குறித்து சோகம், அவமானம் மற்றும் நியாயமற்றது என தனது இன்ஸ்டா பக்கத்தில் சாடியுள்ளார் பிரபல நடிகை.

    Recommended Video

    பின்வாங்கிய மத்திய அரசு.. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன?

    நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகையாக உள்ளார்.

    தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் நடிகை கங்கனா ரனாவத். அதன் பின் தமிழில் தலைக்காட்டாமல் இருந்த நடிகை கங்கனா ரனாவத், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தலைவி படத்தில் நடித்தார்.

    ஜெயலலதா வாழ்க்கை வரலாறு படம்

    ஜெயலலதா வாழ்க்கை வரலாறு படம்

    ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கங்கனா ரனாவத். இப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் நடிப்பு பாராட்டை பெற்றது. பாலிவுட்டில் பிஸியாக உள்ள நடிகை கங்கனா, தாகட், தேஜாஸ், டிக்கு வெட்ஸ் ஷெரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    அரசியலிலும் தீவிரம்

    அரசியலிலும் தீவிரம்

    மணிகர்ணிகா, பங்கா ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற கங்கனா ரனாவத்துக்கு, சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக உள்ளார் நடிகை கங்கனா ரனாவத். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கங்கனா, மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

    வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து

    வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து

    அதேபோல் பாலிவுட் சினிமாவில் உள்ள குறைகளையும் விளாசி வருகிறார். சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் இருப்பதாகவும் போதை பொருட்கள் பயன்பாடு இருப்பதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது குறித்து நடிகை கங்கனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.

    சோகம் அவமானம்.. நியாயமற்றது..

    சோகம் அவமானம்.. நியாயமற்றது..

    அவர் பதிவிட்டிருப்பதாவது, 'சோகம், அவமானம் மற்றும் முற்றிலும் நியாயமற்றது' என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர் ஒருவரின் பதிவுக்கு பதில் அளித்துள்ள நடிகை கங்கனா ரனாவத், "தெருவில் உள்ளவர்கள் சட்டங்களை இயற்றத் தொடங்கிவிட்டார்கள், பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல, இதுவும் ஒரு ஜிகாதி தேசம்தான்... இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று கங்கனா கூறி உள்ளார்.

    லத்தி தான் ஒரே தீர்வு

    லத்தி தான் ஒரே தீர்வு

    இதேபோல் இந்திரா காந்தியின் 104வது பிறந்தநாளுக்கு நடிகை கங்கனா ரனாவத் வாழ்த்து தெரிவித்தார். அதில் "தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, ​​லத்தி தான் ஒரே தீர்வு, சர்வாதிகாரம்தான் ஒரே தீர்மானம்.. பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம் " என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actress Kangana Ranaut disappointed with PM Modi's withdrawal of farm laws. She has posted that 'sad, shameful, absolutely unfair' in instagram story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X