கொரோனாவில் இருந்து மீண்டதாக கூறிய கங்கனா.. பங்கமாக்கிய நெட்டிசன்ஸ்.. புரூஃபையே போட்டுட்டாங்க!
சென்னை: கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக கூறிய நடிகை கங்கனா ரனாவத்தை நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் உச்சக்கட்டத்தில் உள்ளது. சாமானிய மக்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களில் பாலிவுட், கோலிவுட் என திரை பிரபலங்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நான் அழிப்பேன்
இந்த தகவலை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும் "இந்த வைரஸ் என் உடலில் பார்ட்டி பண்ண வந்திருக்கிறது எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால் அதை நான் அழிப்பேன்.

சிறு காய்ச்சல் மட்டுமே
அனைவரும் வாருங்கள் இந்த கொரோனாவை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஹர ஹர மகாதேவ்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நீக்கப்பட்ட பதிவு
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றை சிறு விஷயம் என்று நடிகை கங்கனா கூறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது இந்த சர்ச்சைக்குரிய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியது. உலகையே அதிரவைத்திருக்கும் கொரோனா தொற்றை 'சிறு காய்ச்சல்' என்று குறிப்பிட்டிருந்ததால் அவரின் பதிவு நீக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராம் விளக்கம் அளித்திருந்தது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றை சிறு விஷயம் என்று நடிகை கங்கனா கூறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது இந்த சர்ச்சைக்குரிய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியது. உலகையே அதிரவைத்திருக்கும் கொரோனா தொற்றை 'சிறு காய்ச்சல்' என்று குறிப்பிட்டிருந்ததால் அவரின் பதிவு நீக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராம் விளக்கம் அளித்திருந்தது.

நெகட்டிவான கொரோனா
இந்நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்த கங்கனா ரனாவத், தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்த கங்கனா ரனாவத், தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

சிலர் புண்படுகிறார்கள்
மேலும் கொரோனாவை எவ்வாறு எதிர்கொண்டேன் என்பது குறித்து கூற நிறைய உள்ளதாகவும், கொரோனா தொற்றை மரியாதை குறைவாக பேசினால் சிலர் புண்படுகிறார்கள் எனவும் கிண்டலடித்து பதிவிட்டார்.

டெஸ்ட்டிங் ரிப்போர்ட்
ஆனால் தான் கொரோனாவில் இருந்து மீண்டதாக கூறிய தகவலை நெட்டிசன்கள் ஏற்கவில்லை. கங்கனா பொய் சொல்வதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து தனது நெகட்டிவ் ரிப்போர்ட்டையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.


Click it and Unblock the Notifications











