இவர்தான் சினிமா மாஃபியா கும்பலின் முக்கிய குற்றவாளி.. கோர்த்துவிட்ட நடிகை.. பிரதமரிடமும் புகார்!
மும்பை: சினிமா மாஃபியா கும்பலில் கரண் ஜோஹர் தான் முக்கிய குற்றவாளி என நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
சுஷாந்த் மரணத்தில் இருந்து பாலிவுட்டில் கேங்க் அரசியல், வாரிசு அரசியல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் பாலிவுட் சினிமாவில் நெபோட்டிசம் இருப்பதாகவும், சில வாரிசு நடிகர்கள் பாலிவுட் மாஃபியாக்களாக உள்ளனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

கங்கனா ரனாவத்
பாலிவுட்டைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகளே வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தி சினிமாவில் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத்.

திரையுலக மாஃபியா
சுஷாந்த் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பவே கூடாது என்றும் பேசி வருகிறார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் திரையுலக மாஃபியா கும்பலில் கரண் ஜோஹர் தான் முக்கிய குற்றவாளி என கங்கனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமரிடம் புகார்
பலரது வாழ்க்கையையும் உயிரையும் அழித்த பிறகும் சுதந்திரமாக சுற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எங்களுக்கு ஏதாவது நம்பிக்கை கிடைக்குமா? என்று கேட்டுள்ள கங்கனா பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

ஆதரவும் எதிர்ப்பும்
கங்கனா ரனாவத்தின் இந்த பதிவு பாலிவுட் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்கனாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்த போதும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து நடிகை கங்கனா ரனாவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











