சினிமாவில் 50 வருஷம்... ஹேர் ஸ்டைலிஷ்டை பாராட்டிய கங்கனா... 'தலைவி'யின் கிளாசிக் லுக் அவுட்!
சென்னை: சினிமாவுக்கு வந்து 50 வருடமான ஹேர் ஸ்டைலிஷ்டை பாராட்டியுள்ள நடிகை கங்கனா 'தலைவி' படத்தின் தனது கிளாசிக் லுக்கை வெளியிட்டுள்ளார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் விஜய், தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார்.
ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்தவர்.

சோபன் பாபு
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆராக, நடிகர் அரவிந்த் சாமியும் கருணாநிதியாக நடிகர் பிரகாஷ்ராஜும் நடிக்கின்றனர். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக, பிரியாமணி நடிக்கிறார். சோபன் பாபுவாக, பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனாக, நடிகர் சமுத்திரக்கனி வருகிறார்.

3 மொழிகளில்
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்துரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.

எம்.ஜி.ஆர் போலவே
இந்நிலையில், இந்தப் படத்தில் 'எம்ஜிஆர் லுக்' போஸ்டரை, எம்.ஜி.ஆர்.பிறந்த நாளான கடந்த 17 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரில் நடிகர் அரவிந்த் சாமி அப்படியே எம்.ஜி.ஆர் போல இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். அன்று ஸ்பெஷல் டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதுவும் வரவேற்பை பெற்றது.
மரியா சர்மா
இந்நிலையில், தனது ஹேர் ஸ்டைலிஷ்டான மரியா சர்மா, சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அவரை பாராட்டியுள்ளார் கங்கனா. தற்போது தலைவி படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் கங்கனா, மரியா சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

கிளாசிக் லுக்
தலைவி படத்துக்காக கங்கனாவின் ஹேர்ஸ்டைலை ஃபைனல் டச் பண்ணும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது தலைவி படத்தின் கிளாசிக் லுக். இதைக் கண்ட ரசிகர்கள் கங்கனாவின் லுக்கை பாராட்டி வருகின்றனர்.
ஹேர்ஸ்டைலிஸ்ட் மரியா, பழம்பெரும் நடிகைகள் ஹேமமாலினி, ஷர்மிளா தாகூர், ஹெலன், மணிஷா கொய்ராலா உட்பட பலருக்கு ஹேர் ஸ்டைலிஷ்டாக பணிபுரிந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











