ஜெ.வின் பிரச்சாரங்களை தொடர்ந்து போட்டு போட்டு கேட்டு வருகிறேன்.. ஹேப்பி மோடில் பிரபல நடிகை!
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ள நடிகை கங்கனா ரணாவத் அவரது பிரச்சாரங்களை போட்டு போட்டு கேட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஏல் விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு தலைவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கிறார்.
கங்கனா ரணாவத் கடந்த சில நாட்களாக செய்தியாளர்களுடன் மோதல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் இந்தப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை கங்கனா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

பாடி லாங்குவேஜ்
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். ஜெயலலிதாவின் பாடிலாங்குவேஜ்க்காக தொடர்ந்து பயிற்சி செய்து வருகின்றேன்.

பிரச்சாரங்கள்
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரங்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன். புரட்சி தலைவி என்ற பட்டத்துக்கு தகுதியான ஜெயலலிதாவின் வேடத்தில் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

விரைவில் படப்பிடிப்பு
ஜெயலலிதா நடிகையாக வேண்டும் என்று விரும்பிய காலத்தில் இருந்து படத்தின் கதை தொடங்கும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். தலைவி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அதிமுகவினரால் அம்மா என அன்போடு அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா. பல இன்னல்கள், தடைகள், தோல்விகளை தாண்டி திரை வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் வெற்றி பெற்று சாதித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரையில் காண ரசிக்ரகளும் ஆர்வமுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











